பாகிஸ்தான் அமைச்சரின் தலையைத் துண்டித்து கொண்டு வந்தால் ரூ.2 கோடி தருகிறேன்: பாஜக நிர்வாகி பேச்சால் சர்ச்சை

பிலாவல் பூட்டோ சர்தாரி
பிலாவல் பூட்டோ சர்தாரி

பிரதமர் நரேந்திர மோடி குறித்து சர்ச்சை கருத்து கூறிய பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ சர்தாரியின் தலையைத் துண்டித்து கொண்டு வந்தால் 2 கோடி தருவதாக பாஜக நிர்வாகி பேசியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ சர்தாரியின் பேச்சுக்கு மத்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. அத்துடன் நாடு ழுமுவதும் பாஜகவினர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், உத்தர ப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பாக்பாத் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பாஜக. சார்பில் நேற்று போராட்டம் நடந்தது.

மனுபால் பன்சால்
மனுபால் பன்சால்

அப்போது பாஜக உள்ளூர் நிர்வாகியும், மாவட்ட கவுன்சில் உறுப்பினருமான மனுபால் பன்சால் பேசுகையில்," பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ சர்தாரியின் தலையைத் துண்டித்து கொண்டு வந்தால் 2 கோடி கொடுப்பேன்" என்று பொதுவெளியில் அறிவித்தார். இதன் பின் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்," இதுகுறித்து நன்கு அறிந்துதான் பேசினேன். எனது கருத்தில் உறுதியாக இருக்கிறேன்" என்று கூறினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in