`என் தந்தை மாதிரி தயவு தாட்சண்யம் பார்க்கமாட்டேன்'- நிர்வாகிகளை அதிரவைத்த துரை வைகோ

`என் தந்தை மாதிரி தயவு தாட்சண்யம் பார்க்கமாட்டேன்'- நிர்வாகிகளை அதிரவைத்த துரை வைகோ

``தலைவர் வைகோ மாதிரி நான் தயவு தாட்சண்யம் பார்க்கமாட்டேன். வெட்டு ஒன்னு துண்டு ரெண்டுதான்" என்று நிர்வாகிகளிடம் மதிமுக தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ காட்டமாக பேசினார்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் நடந்த கட்சியின் நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய மதிமுக தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ, "தலைவர் இந்த இயக்கத்திற்காக 25 வருடங்கள் உழைத்து இருக்கிறார். இனி அவருக்காக நாம் உழைக்க வேண்டும். நமக்குள் சகோதர யுத்தம் வேண்டாம். அண்ணன், தம்பியாக இருக்க வேண்டும். தென்காசி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் மதிமுக வலுவாக இருந்த இடம். அந்த இடத்தை மீண்டும் நாம் பிடிக்க வேண்டும்.

வருங்காலங்களில் நான் சொன்ன மாதிரி இயக்கத்திற்கு உழைப்பவர்கள் மட்டுமே இயக்கத்தில் இருக்க முடியும். மற்றவர்களுக்கு கதவு திறந்து வைக்கப்பட்டுள்ளது. அவர்கள் வெளியே செல்லலாம். உழைப்பவர்களுக்கு கட்சியில் மரியாதை கொடுக்கப்படும். விசுவாசத்துக்கும் மரியாதை கொடுக்கப்படும். தலைவர் வைகோ மாதிரி நான் தயவு தாட்சண்யம் பார்க்கமாட்டேன். வெட்டு ஒன்னு துண்டு ரெண்டுதான்" என்று காட்டமாக பேசினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in