‘விவசாயம் பார்க்க போய்விடுவேன்...’ அண்ணாமலையை கழற்றிவிடப் பார்க்கிறதா பாஜக?

அண்ணாமலை
அண்ணாமலை

''டெல்லி தலைமையிடம் கூட்டணி தொடர்பாக உரிய நேரத்தில் பேசுவேன். ஒரு கருத்துக்கு எதிர் கருத்து தெரிவித்தால் அது எங்கே போய் முடியும் என்பது தெரியாது. அரசியலை விட்டுவிட்டால் நான் தோட்ட வேலைக்கு, விவசாயம் பார்க்க சென்றுவிடுவேன்'' என அண்ணாமலை கூறியுள்ளது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுகவுடனான கூட்டணி முறிவு குறித்து ஆலோசிக்க இன்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை டெல்லி செல்லவுள்ளார். முன்னதாக கோவை மாவட்டம் அன்னனூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘’நெடுங்குன்றம் ரவுடி சூர்யா, பாஜகவில் இணைந்தது குறித்து எனக்குத் தெரியாது. கடந்த காலங்களில் தவறு செய்தவர்கள் பாஜகவில் இணைந்து திருந்தி வாழ நினைக்கலாம். அவர்களுக்கு பாஜக ஒரு வாய்ப்பு கொடுத்ததாக இதை பார்க்கிறேன்.

ஒரு நல்ல பாரதத்தை படைக்க பாஜகவை சூர்யா பயன்படுத்திக் கொள்ளட்டும். ஆனால் பாஜகவின் பெயரை வைத்துக் கொண்டு தவறு செய்தால் அவர்களை அனுமதிக்க முடியாது. டெல்லி தலைமையிடம் கூட்டணி தொடர்பாக உரிய நேரத்தில் பேசுவேன். ஒரு கருத்துக்கு எதிர் கருத்து தெரிவித்தால் அது எங்கே போய் முடியும் என்பது தெரியாது. அரசியலை விட்டுவிட்டால் நான் தோட்ட வேலைக்கு, விவசாயம் பார்க்க சென்றுவிடுவேன்’’ என அண்ணாமலை கூறினார்.

அண்ணாமலையின் இந்த கருத்து அவரது ஆதரவாளர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக கூட்டணிக்காக அண்ணாமலையை மாற்ற பாஜக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி வரும் நிலையில், அண்ணாமலையின் இந்த பேட்டி அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

இன்று முதல் அமலுக்கு வரும் புதிய திட்டங்கள், கட்டுப்பாடுகள் இவை தான்!

'நடிகர் திலகம்’ சிவாஜி கணேசன் பிறந்தநாள் ஸ்பெஷல்: ‘பராசக்தி’ முதல் ‘படையப்பா’ வரை!

எல்ஐசி ஹைட்டு... எடப்பாடியார் வெயிட்டு!

‘ஆடியோ லாஞ்ச் கேன்சல்’ அதிமுகவைத் தேடிப்போன அண்ணாமலை!

நாளை தமிழகம் முழுவதும் 12,525 ஊராட்சிகளிலும் கிராமசபைக் கூட்டம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in