`ஆதீனத்தைத் தோளில் சுமக்க நான் நேரில் வருவேன்'- சொல்கிறார் அண்ணாமலை

`ஆதீனத்தைத் தோளில் சுமக்க நான் நேரில் வருவேன்'- சொல்கிறார் அண்ணாமலை

"ஆதீனத்தைத் தோளில் சுமக்க நான் நேரில் வருவேன் என்பதைத் தமிழக அரசுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் இன்று எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, தருமபுரம் ஆதீனம் விவகாரம் தொடர்பாக கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசுகையில், "பாரம்பரியமாக நடந்து வரும் தருமபுரம் ஆதீனத்தை பல்லக்கில் தூக்குவதற்கு விதித்த தடையை நீக்க வேண்டும். மத சுதந்திர உரிமை அடிப்படையில் பல்லக்கில் தருமபுரம் ஆதீனம் பட்டனப்பிரவேசம் செய்ய தடை விதிக்க முடியாது" என்றார். பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகளும் தருமபுரம் ஆதீனத்தை பல்லக்கில் தூக்க தடை விதித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தன.

இதற்கு பதில் அளித்து பேசிய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, "சிலர் தாங்கள் செய்த தவறுக்காக பல்லக்கில் தூக்க தடை விதித்ததை அரசியலாக்க பார்க்கிறார்கள். வரும் 22-ம் தேதி வரை கால அவகாசம் உள்ளதால் தருமபுரம் ஆதீனத்துடன் முதல்வர் பேசி விரைவில் நல்ல முடிவை அறிவிப்பார்" என்றார்.

தற்போது இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ளார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை. இது தொடர்பாக தனது ட்விட்டர் பதிவில், "தருமபுர ஆதீனத்தின் பல நூற்றாண்டுகள் பழமையான ‘பட்டினப் பிரவேசம்’ மீதான தடை தமிழக நாகரிகம் மற்றும் கலாச்சாரத்திற்கு எதிரானது. ஆதீனத்தைத் தோளில் சுமக்க நான் நேரில் வருவேன் என்பதைத் தமிழக அரசுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த சட்டவிரோத உத்தரவை எதிர்த்து நிகழ்ச்சியை நடத்த அனுமதிக்குமாறு ஆதீனத்திடம் கோரிக்கை வைப்போம்

கோபாலபுர குடும்பத்தை அவரது கட்சியினர் தூக்கிச் சுமப்பதை போல் அல்ல இது. ஊழியம் மற்றும் குருவுக்குச் செய்யும் சேவையின் உள்ள வேறுபாடுகளைக் கூட அறியாதவர் இந்த கோபாலபுர குடும்பத்தார். தமிழக பாஜக இந்த நிகழ்ச்சியை நடத்திக் காட்ட தயாராக இருக்கிறது!" என்று கூறியுள்ளார்.

தற்போது எதுவுமே கிடைக்காத நிலையில், அண்ணாமலை இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in