`ஓய்வெடுக்க விரும்பவில்லை; 2024-ல் நானே பிரதமர் வேட்பாளர்'- மோடி சூசக தகவல்

`ஓய்வெடுக்க விரும்பவில்லை; 2024-ல் நானே பிரதமர் வேட்பாளர்'-  மோடி சூசக தகவல்

"இனி ஓய்வெடுக்கலாம் என தாம் நினைக்கவில்லை" என்று பிரதமர் மோடி கூறியிருப்பதன் மூலம் 2024-ல் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் நானே பாஜகவின் பிரதமர் வேட்பாளர் என சூசகமாக தெரிவித்துள்ளார்.

குஜராத்தின் பருச் பகுதி மக்களிடையே காணொளி வாயிலாக பேசிய பிரதமர் மோடி, தம்மை சந்தித்த எதிர்கட்சியை சேர்ந்த தலைவர் ஒருவர் இரண்டு முறை பிரதமராக இருந்தாலே போதும். வேறு என்ன வேண்டும் கேட்டார். ஆனால், நான் முற்றிலும் மாறுபட்ட படைப்பு என்பது அவருக்கு தெரியவில்லை. குஜராத் தம்மை வடிவமைத்திருக்கிறது. அதனால்தான் நடந்தது நடந்து விட்டது.

இனி ஓய்வெடுக்கலாம் என தாம் நினைக்கவில்லை. நலத்திட்டங்கள் 100 விழுக்காடு மக்களை சென்றடைந்ததை உறுதி செய்வதே தமது கனவு. முன்பைவிட, மேலும் உத்வேகத்துடன் பணியாற்றப்போவதாக அந்த எதிர்கட்சி தலைவரிடம் தான் கூறினேன்" என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in