‘இதற்கான பெருமையை பிரதமர் மோடிக்கு வழங்க விரும்புகிறேன்’ - அஜித் பவாரின் கிளர்ச்சி குறித்து சரத் பவார் ஆவேசம்!

அஜித் பவார் சரத் பவார்
அஜித் பவார் சரத் பவார்‘இதற்கான பெருமையை பிரதமர் மோடிக்கு வழங்க விரும்புகிறேன்’ - அஜித் பவாரின் கிளர்ச்சி குறித்து சரத் பவார் ஆவேசம்!

என்சிபி தலைவர்கள் ஊழலில் ஈடுபட்டுள்ளனர் என்றும், பாசன ஊழலில் ஈடுபட்டுள்ளனர் என்றும் பிரதமர் மோடி குற்றம்சாட்டினார். ஆனால் இப்போது என்சிபியை சேர்ந்த பலர் அமைச்சராகியுள்ளனர் என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் கூறியுள்ளார்.

இன்று செய்தியாளர்களிடம் பேசிய சரத் பவார், “இரண்டு நாட்களுக்கு முன்பு தேசியவாத காங்கிரஸ் ஒரு முடிந்துபோன கட்சி என்று பிரதமர் கூறியிருந்தார். என்சிபி மீது நீர்ப்பாசன புகார் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை அவர் குறிப்பிட்டார். இப்போது எனது சகாக்கள் சிலர் பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்டதில் மகிழ்ச்சி அடைகிறேன். தேசிய முற்போக்கு கூட்டணி அரசில் இணைந்தவுடன் அனைத்துக் குற்றச்சாட்டுகளும் விடுவிக்கப்பட்டுவிட்டன என்பது தெளிவாகிறது. அவருக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

என்சிபி தலைவர்கள் ஊழலில் ஈடுபட்டுள்ளனர் என்றும், பாசன ஊழலில் ஈடுபட்டுள்ளனர் என்றும் பிரதமர் மோடி குற்றம்சாட்டினார். பிரதமர் மோடி கூறிய குற்றச்சாட்டுகள் தவறு என்பது இன்று நிரூபணமாகியுள்ளது. எங்கள் தலைவர்களில் 6-7 பேர் மீது வழக்குகள் இருப்பதால், ஏஜென்சிகளைப் பயன்படுத்தி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று நான் நினைக்கிறேன்.

எனது வீடு பிரிந்தது என்று நான் ஒருபோதும் கூறமாட்டேன். இந்த பிரச்சினை எனது வீடு தொடர்பானது அல்ல, இது மக்களின் பிரச்சினை. வெளியேறியவர்களின் எதிர்காலம் குறித்து நான் கவலைப்படுகிறேன். இதற்கான பெருமையை பிரதமர் மோடிக்கு வழங்க விரும்புகிறேன். இரண்டு நாட்களுக்கு முன்பு அவர் ஒரு அறிக்கையை வெளியிட்டார். அந்த அறிக்கைக்குப் பிறகு சிலருக்கு அமைதியின்மை ஏற்பட்டது. அவர்களில் சிலர் அமலாக்கத்துறை நடவடிக்கைகளையும் எதிர்கொண்டனர். இது தேடு பொறி நடவடிக்கை அல்ல, கொள்ளை.

கட்சியை மீண்டும் பலப்படுத்த பாடுபடுவோம். எம்எல்ஏக்கள் மற்றும் மூத்த தலைவர்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து கிளர்ச்சித் தலைவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது குறித்து முடிவு எடுப்பார்கள். நான் தலைவராக இருந்து பிரபுல் படேல் மற்றும் சுனில் தட்கரே ஆகியோரை நியமித்தேன் ஆனால் அவர்கள் தங்கள் பொறுப்புகளை பின்பற்றவில்லை. எனவே, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எதிர்க்கட்சித் தலைவர் யார் என்பதை முடிவு செய்வது சபாநாயகரின் உரிமை. அடுத்த இரண்டு அல்லது மூன்று நாட்களில், நிலைமை குறித்து காங்கிரஸ் மற்றும் உத்தவ் தாக்கரேவுடன் அமர்ந்து ஆலோசிப்போம். எங்கள் முக்கிய பலம் சாமானிய மக்கள், அவர்கள் எங்களைத் தேர்ந்தெடுத்துள்ளனர். எனக்கு பலரிடமிருந்து பல அழைப்புகள் வருகின்றன, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மம்தா பானர்ஜி மற்றும் பலர் என்னை அழைத்துள்ளனர். இன்று என்ன நடந்தாலும் நான் கவலைப்படவில்லை. நாளை, ஒய்.பி.சவானின் (முன்னாள் மகாராஷ்டிர முதல்வர்) ஆசி பெற்று, பொதுக்கூட்டம் நடத்துவேன்.

எனது கட்சியை சேர்ந்த சிலர் தற்போது வேறொரு நிலையை எடுத்துள்ளனர். கட்சியில் செய்யப்பட வேண்டிய மாற்றங்கள் குறித்தும், முக்கிய பிரச்னைகள் குறித்தும், ஜூலை 6ம் தேதி அனைத்து தலைவர்களின் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தேன். ஆனால் அதற்குள் சிலர் மாறுபட்ட நிலைப்பாட்டை எடுத்துள்ளனர்

எங்கள் கட்சிக்கு இது புதிது கிடையாது. 1980-ல் கட்சியில் இருந்து 58 எம்எல்ஏக்கள் வெளியேறி வெறும் 6 எம்எல்ஏக்கள் மட்டுமே என்னுடன் இருந்தனர். பின்னர் மீண்டும் கட்சியை பலப்படுத்தி, எம்எல்ஏக்களின் எண்ணிக்கையை உயர்த்தினேன்” என்று தெரிவித்தார்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in