திருநெல்வேலி எம்.பி தொகுதியில் போட்டியிட விரும்புகிறேன்: மனம் திறந்த நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ

நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ
நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ

பாராளுமன்றத் தேர்தலில் திருநெல்வேலி தொகுதியில் போட்டியிட விரும்புவதாக பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

திருநெல்வேலியில் பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களிடம் இன்று கூறுகையில், “நெல்லை தொகுதியில் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட ஆசைப்படுகிறேன். கட்சித் தலைமை அனுமதித்தால் போட்டியிடுவேன். பாராளுமன்றத் தேர்தலிலும் அதிமுகவுடன் கூட்டணி தொடரும். மத்திய அரசு கொண்டுவந்த பத்து சதவீத இடஒதுக்கீட்டில் கிறிஸ்தவ, இஸ்லாமியரின் சில பிரிவினர்கூட பயன் அடைவார்கள். தமிழக அரசு இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்ததில் எங்களுக்கு உடன்பாடு இல்லை.

பத்து சதவீத இடஒதுக்கீட்டை தமிழகத்திலும் விரைவில் அமல்படுத்த வேண்டும். ஆளுநரை எந்த ஒரு செயலையும் செய்யச் சொல்லி யாரும் நிர்பந்திங்க முடியாது. அதிமுகவில் அனைவரும் இணைந்தால் கூட்டணி இன்னும் பலம்பெறும். கால்பந்து வீராங்கனை பிரியா உயிரிழப்பில் மருத்துவக் கவனக்குறைவு நிகழ்ந்துள்ளது. மருத்துவமனையில் அதற்கான வசதிகள் இருந்ததா என்பதையும் ஆராய வேண்டும் ”என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in