மிஸ்டர் லோக்கல் என அரசியலில் பெயர் எடுக்க வேண்டும்: நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கலகல!

பழனிவேல் தியாகராஜன்
பழனிவேல் தியாகராஜன்மிஸ்டர் லோக்கல் என அரசியலில் பெயர் எடுக்க வேண்டும்: நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கலகல!

அரசியலில் மிஸ்டர் லோக்கல், மிஸ்டர் கேரிங் என்ற பெயர் எடுக்க வேண்டும் என்றும், ஜெயலலிதா காலத்தில் அக்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் மற்ற உறுப்பினர்களுடன் பேச பயப்படுவார்கள். அந்த நிலை தற்போது மாறியுள்ளது என தமிழக நிதியமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் பேசியுள்ளார்.

அரசியல் தலைமை, வளர்ந்து வரும் அரசியல் தலைவர்களுக்கான தலைவா என்ற பெயரில் பயிற்சிரங்கம் சென்னை தியாகராய நகரில் நடைபெற்றது. இந்நிகழ்வில் தமிழக நிதியமைச்சர் பிடிஆர். பழனிவேல் தியாகராஜன், ஆஸ்பயர் சுவாமிநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சியில் மாணவர்களின் கேள்விக்கு பதிலளித்து அமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் பேசுகையில், ‘’ தமிழகத்தில் அரசியல் களம் வேகமாக மாறிக்கொண்டிருக்கிறது. சட்டமன்ற உறுப்பினராகிய 7 வருடங்களில் பெரிய மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது.

நிதி நிலை அறிக்கை தாக்கலானால் பலரும் ஒரு கேள்வியைக் கேட்பதில்லை. இதெல்லாம் ஒதுக்கீடு, இதெல்லாம் நிதி ஆதாரங்கள். அவை கடந்த ஆண்டை விட இவ்வளவு மாறியிருக்கிறது என்பது தான். 2022-23-ம் ஆண்டிலிருந்து 2023-24-ம் ஆண்டிற்குள்ள என்ன சாதிக்கப் போகிறீர்கள் என்பதுதான் என் கேள்வி.

கல்வி உள்ளிட்டவற்றில் சமமான முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், மத்திய நிதியமைச்சர் அலுவலகத்திற்கு சரியான காரணத்துடன் சென்றால் யாருடைய கருத்துக்கு என்ன மதிப்பு என்பது தெரிகிறது.

ஜெயலலிதா காலத்தில் அக்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் பிற கட்சி உறுப்பினர்களுடன் பேச பயப்படுவார்கள். அவருக்குப் பிறகு பிற கட்சி உறுப்பினர்களுடன் பேசும் நிலை காணப்படுகிறது.

திராவிட இயக்கத்தின் திண்ணைப் பிரச்சாரம், மாணவர் அணி, இளைஞர் அணி போன்றவற்றினால் 1967-ல் பெரும்பான்மை மக்களின் விருப்பத்தினால் ஆட்சி அமைந்தது. அரசியலில் நீண்ட வெற்றிக்குச் சித்தாந்தம் வேண்டும். மக்களிடம் கருத்துகளைக் கொண்டு செல்ல பாரம்பரிய முறைகளைப் பயன்படுத்த வேண்டும். சமூக ஊடகங்கள் பெரிய அளவிலான தொடர்பு சாதனங்களாக உள்ளது.

மிஸ்டர் லோக்கல், மிஸ்டர் கேரிங் என்ற பெயர் எடுக்க வேண்டும். கிரகப்பிரவேசம், காதுகுத்து உள்ளிட்டவற்றுக்கு செல்ல வேண்டும்.

நல்ல அரசியல்வாதிக்கு 2 முக்கிய அம்சங்கள் அடையாளம். மனித நேயம் - அடுத்தவரின் துயரத்தை நீக்குவது, மக்களுக்கு தூணாக பிடிஆர் வீட்டுக்குப் போனால் நியாயம் கிடைக்கும் என்பது. அநாவசியமாக புகழ்வதாக நினைக்க வேண்டாம். முதல் முறை அமைச்சரான எனக்கு நிதியமைச்சர் என்ற பொறுப்பை முதலமைச்சர் கொடுத்தது புரட்சி.

புரட்சிகரமான முடிவை எடுத்ததற்கான கைமாறாக சிறப்பான விளைவைக் கொடுக்க வேண்டும். எதிர்பார்த்ததற்கு மேலாக சிறப்பான விளைவை நிறைவேற்ற முடிகிறது. நூறுக்காக இருநூறு முயற்சிகள் எடுக்கிறோம் ‘’ என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in