அசாமில் 50% காங்கிரஸை நான்தான் நடத்துகிறேன்: ஹிமந்த பிஸ்வா சர்மா

ஹிமந்த பிஸ்வா சர்மா
ஹிமந்த பிஸ்வா சர்மா

அசாம் மாநிலத்தில் 50 சதவீத காங்கிரஸை நான்தான் நடத்துகிறேன் என்று அம்மாநில பாஜக முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா கூறியுள்ளார்.

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஹிமந்த பிஸ்வா சர்மா, "நான் காங்கிரஸில் 22 வருடங்கள் இருந்துள்ளேன். அதன்பின், இப்போது பாரதிய ஜனதா கட்சியில் இருக்கிறேன். ஆனால் காங்கிரஸ் கட்சியினருடனான எனது உறவு உடனடியாக முடிவடையாது. நான் அரசியலுக்கு கொண்டு வந்த பல நண்பர்கள் மற்றும் இளைஞர்கள் அக்கட்சியில் உள்ளனர். அவர்கள் என்னிடம் ஆலோசனை கேட்கிறார்கள். காங்கிரஸில் உள்ள பல தலைவர்கள் எனக்கு நண்பர்கள். அவர்கள் என்னிடம் ஆலோசனைக்காக வருகின்றனர். நான்தான் 50 சதவீதம் காங்கிரஸை நடத்துகிறேன்" என்று கூறினார்.

காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தியின் தற்போதைய பாரத் ஜோடோ யாத்திரை குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், " அசாமில் இப்போது தேர்தல் எதுவும் இல்லை, எனவே நாங்கள் ஏன் ராகுல் காந்தியைப் பற்றி பேச வேண்டும்?" என்று கூறினார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in