எதைப்பேசினாலும் நம்புற மாதிரியே பேசுவார்: விஜயபாஸ்கரை கிண்டலடித்த துரைமுருகன்!

துரைமுருகன்
துரைமுருகன்எதைப்பேசினாலும் நம்புற மாதிரியே பேசுவார்: விஜயபாஸ்கரை கிண்டலடித்த துரைமுருகன்!

அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் எதை பேசினாலும் நம்புற மாதிரியே பேசுவார், அது எனக்கு ரொம்பப் பிடிக்கும் என அமைச்சர் துரைமுருகன் சட்டப்பேரவையில் பேசியதால் சிரிப்பலை எழுந்தது.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் மக்கள் நல்வாழ்வுத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பங்கேற்றுப் பேசுகையில், ‘’ 6 ஆண்டுகளாகத் தொடந்து இந்தியாவில் முதலிடத்தில் பெற்ற துறை கடந்த இரண்டாண்டுகளாகப் பின்னோக்கி சென்றது ஏன்? தெலங்கானா, மகாராஷ்டிரா நம்மை முந்திவிட்டார்கள். ஏன் ?

மேலும் திமுக பட்ஜெட்டில் சொல்லியிருக்கும் பல திட்டங்கள் அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்டவை. அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்குத் தாய்மாமன் சீர் கொண்டு வருவதற்கு முன்னதாகவே சீர் வரிசைக் கொடுக்கும் திட்டம் ஜெயலலிதா கொண்டுவந்தார். அதிமுக ஆட்சிக்காலத்தில் பச்சைக் கலராக இருந்த பெட்டி, மஞ்சளாக மாறியுள்ளது. அம்மா பரிசுப் பெட்டகம், குழந்தைகள் பரிசு பெட்டகமாக மாறியுள்ளது’’ என பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது குறிக்கீட்ட அவை முன்னவரும், அமைச்சருமான துரைமுருகன், ‘’ விஜயபாஸ்கர் எது பேசினாலும் நம்புற மாதிரியே பேசுவார். அது எனக்கு ரெம்பப் பிடிக்கும்'’ என்றார். அதற்குப் பதிலளித்த விஜயபாஸ்கர், ‘’உள்ளதைப் பேசுவது நம்புவது போலத் தான் இருக்கும் என்பதை அவை முன்னவர் தெரிந்து கொள்ள வேண்டும்'’ என்றார். இதனால் பேரவையில் சிரிப்பலை எழுந்தது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in