’நடிகர் விஜயை மிகவும் பிடிக்கும்’ -மனம் திறந்த சென்னை மேயர் பிரியா!

மேயர் பிரியா.
மேயர் பிரியா. ’நடிகர் விஜய் மிகவும் பிடிக்கும்’ - மனம் திறந்த சென்னை மேயர் பிரியா!

’’பள்ளி நாட்களில் இருந்தே நடிகர் விஜயை மிகவும் பிடிக்கும். அவரது நடன அசைவுகள் மிகவும் பிடித்த ஒன்று’’ என சென்னை மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.

மகளிர் தினத்தை முன்னிட்டு நேர்காணல் ஒன்றில் சென்னை மேயர் பிரியா பேசும்போது, ‘’குழந்தையிடம் மட்டுமே நேரங்களை செலவழித்த எனக்கு தற்போது பொதுப்பணிகளில் அதிக கவனம் செலுத்த வேண்டிய நிலை உள்ளது. அரசியல் ஒரு வித்தியாசமான அனுபவமாக உள்ளது.

மேயராக பொறுப்பேற்றதில் இருந்து பல சவால்களை சந்திக்க வேண்டி இருந்தது. குறிப்பாக மழைநீர் வடிகால் பணிகள் மிகவும் சவாலாக இருந்தன. அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் ஒத்துழைப்பால் அந்த பணிகளை எளிதாக முடிக்க முடிந்தது. முதலமைச்சர் தொடங்கி மூத்த அமைச்சர்கள் வரை அனைவரும் எனக்கு உறுதுணையாக உள்ளனர்.

’என்ன நிகழ்வு, என்ன நடந்து’ என விசாரிக்காமல் மீம்ஸ் போடுவது கொஞ்சம் வருத்தமாக இருக்கும். ஆனாலும் அதனையெல்லாம் பொருட்படுத்துவதுல்லை. என்னுடைய முழு கவனமும் சென்னை மாநகராட்சி பள்ளிகளை தரம் உயர்த்த வேண்டும் என்பதில் தான் உள்ளது.

மிகவும் பிடித்த நடிகர் என்றால் அது விஜய் தான். பள்ளி நாட்களில் இருந்தே அவரின் நடன அசைவுகள் மிகவும் பிடிக்கும். டென்னிஸ் விளையாட்டு ரொம்ப பிடிக்கும்’’ என தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in