‘கருணாநிதிக்கு நன்றி சொல்ல வேண்டும்’ - நெகிழ்ந்து பாராட்டும் குஷ்பு!

‘கருணாநிதிக்கு நன்றி சொல்ல வேண்டும்’ - நெகிழ்ந்து பாராட்டும் குஷ்பு!

என்னை அரசியலுக்கு அழைத்துவந்த கருணாநிதிக்கு நன்றி சொல்லவேண்டும் என பாஜக செயற்குழு உறுப்பினரான நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார்.

தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், திமுகவின் முன்னாள் தலைவருமான கருணாநிதிக்கு நன்றி தெரிவித்து குஷ்பு வெளியிட்டுள்ள ட்வீட்டில், “குருபூர்ணிமா நாளான இன்று, என்னை அரசியலுக்கு அழைத்து வந்து மனிதாபிமானம், சமத்துவம், அரசியல் கருணை, சுயமரியாதையை விட சிறந்தது எதுவுமில்லை என்று சொல்லிக் கொடுத்த ஒருவருக்கு நன்றி சொல்ல வேண்டும். கருணாநிதி அவர்கள் எப்போதும் என்னால் நினைவுகூரப்படுவார், என் பார்வையில் எப்போதும் உயர்ந்த இடத்தில் இருப்பார். நன்றி அப்பா” என தெரிவித்துள்ளார்.

பிரபல திரைப்பட நடிகையாக இருந்த குஷ்பு முதலில் திமுகவில் இணைந்து தீவிரமாக அரசியல் பணியாற்றினார். அதன்பின்னர் திமுகவில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்த அவர், தற்போது பாஜகவின் தேசிய செயற்குழு உறுப்பினராக உள்ளார். கடந்த ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலில் பாஜக சார்பில் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்ட அவர் தோல்வியைத் தழுவினார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in