‘தவறுதலாக பேசிவிட்டேன்; ஜனாதிபதியிடம் மன்னிப்பு கேட்கத் தயார்’ - காங்கிரஸ் எம்.பி ஆதிர் ரஞ்சன் சவுத்ரி

‘தவறுதலாக பேசிவிட்டேன்; ஜனாதிபதியிடம் மன்னிப்பு கேட்கத் தயார்’ - காங்கிரஸ் எம்.பி ஆதிர் ரஞ்சன் சவுத்ரி

ஜனாதிபதி திரௌபதி முர்முவை தவறுதலாக பேசியதற்காக அவரிடம் மன்னிப்பு கேட்பேன். ஆனால் வேறு யாரிடமும் மன்னிப்பு கேட்கப்போவதில்லை என்று காங்கிரஸ் எம்.பி ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கூறினார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, "ராஷ்டிரபதி என்பதற்கு பதிலாக ராஷ்டிரபத்னி என்று தவறுதலாக சொன்னது எனது தவறு. நான் பெங்காலி, இந்தி பேசும் நபர் அல்ல. அதனால் வார்த்தை தவறிவிட்டது. நாட்டின் உயரிய பதவியை வகிக்கும் குடியரசுத் தலைவரை அவமதிக்கும் நோக்கம் எனக்கு இல்லை. நான் தவறுதலாக பேசிவிட்டேன். அவர்கள் விரும்பினால் என்னை தூக்கிலிடலாம், தண்டனையை ஏற்க தயார். நான் கூறியதால் ஜனாதிபதியின் மனம் புண்பட்டிருந்தால் அவரிடம் மன்னிப்பு கேட்கத்தயார். நான் பேசியதற்காக சோனியா காந்தியை ஏன் இழுக்க வேண்டும்" என்று கூறினார்.

முன்னதாக, ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஜனாதிபதி திரௌபதி முர்முவை அவமதித்ததாகக்கூறி இன்று நாடாளுமன்றத்திலும், நாடாளுமன்ற வளாகத்திலும் பாஜக எம்.பிக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஆளும் கட்சியினர் கடும் அமளியில் ஈடுபட்டதால் ஒத்திவைக்கப்பட்டது. இந்த கருத்துக்காக ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாஜக வலியுறுத்தியுள்ளது.

இதற்காக ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மன்னிப்பு கேட்பாரா என்ற கேள்விக்கு பதிலளித்த சோனியா காந்தி, "அவர் ஏற்கனவே மன்னிப்பு கேட்டுவிட்டார்" என தெரிவித்தார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in