`எனக்கு ஜால்ரா அடி என்று யாரையும் வற்புறுத்தியதில்லை'- தமிழக நிதியமைச்சர் திடீர் காட்டம்

`எனக்கு ஜால்ரா அடி என்று யாரையும் வற்புறுத்தியதில்லை'- தமிழக நிதியமைச்சர் திடீர் காட்டம்

"நான் ஊருக்கு வந்தால் எனக்கு போஸ்டர் அடி என்றும் எனக்கு ஜால்ரா அடி என்றும் யாரையும் நான் வற்புறுத்தியது இல்லை" என்று தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் காட்டமாக பேசினார்.

மதுரையில் இன்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், "தயவுசெய்து நீங்கள் என்னை சிறிய மனிதராக ஆகாதீர்கள். இன்றைக்கு நான் சொல்கிறேன், அரசியல் என்னும் பொது வாழ்க்கையை விட்டு போகிற வரைக்கும் யாரையும் போய் பார்க்காதே, அந்த நிகழ்ச்சிக்கு போகாதே என்றும் அவர்களது பெயரை போடாதே, அவரது படத்தை போடாதே என்றும் யாரிடமும் என்றைக்கும் சொல்ல மாட்டேன். நான் பெரிய மனிதன். நான் சொல்லத் தேவையில்லை.

அதேபோல் எனக்காக போஸ்டர் அடி, என் பெயரை போடு என்று என்றைக்கும் நான் சொல்ல மாட்டேன். நான் பெரிய மனிதன். சிறிய காரியங்களில் ஈடுபடுவதில்லை. நான் ஊருக்கு வந்தால் எனக்கு போஸ்டர் அடி என்றும் எனக்கு ஜால்ரா அடி என்றும் யாரையும் நான் வற்புறுத்தியது இல்லை" என்று காட்டமாக பேசினார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in