`எத்தனை முறைதான் சோதனை நடத்துவீர்கள்'- கார்த்தி சிதம்பரம் கிண்டல் ட்வீட்

`எத்தனை முறைதான் சோதனை நடத்துவீர்கள்'- கார்த்தி சிதம்பரம் கிண்டல் ட்வீட்

சிபிஐ சோதனை குறித்து கார்த்தி சிதம்பரம் எம்பி கிண்டல் பதிவு ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் போட்டுள்ளார்.

ப.சிதம்பரம் மத்திய நிதியமைச்சராக இருந்தபோது ஐ.என்.எக்ஸ் மீடியா வெளிநாட்டிலிருந்து பணம் பெற உதவியதாக சிபிஐ ஏற்கெனவே வழக்கு பதிவு செய்திருந்தது. இந்நிலையில், வெளிநாட்டு பணப்பரிவர்த்தனை தொடர்பான வழக்கில் கார்த்தி சிதம்பரத்தின் வீடு உள்ளிட்ட இடங்களில் சிபிஐ அதிகாரிகள் ஏற்கெனவே சோதனை நடத்தியுள்ளனர்.

இதனிடையே, கார்த்தி சிதம்பரம் வெளிநாடு சென்றுள்ள நிலையில், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது வீடு, செஸ் குளோபல் அட்வைசரி சர்வீஸ் அலுவலகத்திலும், அதேபோல் டெல்லியில் உள்ள வீடு, அலுவலகங்களிலும் சிபிஐ அதிகாரிகள் இன்று காலை முதலே சோதனை நடத்தி வருகின்றனர். சிதம்பரம் வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது.

சட்டவிரோதமாக பணப்பரிவர்த்தனை புகாரின் பேரில் இந்த சோதனை நடத்தப்பட்டு வருவதாக சிபிஐ தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இதனிடையே வெளிநாட்டில் உள்ள கார்த்தி சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் கிண்டல் பதிவு ஒன்றை போட்டுள்ளார். எத்தனை முறைதான் சோதனை நடத்துவீர்கள் என்றும் எத்தனை முறை சோதனை நடந்தது என்பதை நானே மறந்து விட்டேன் என்றும் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in