`ஈரோடு கிழக்கில் என் இளைய மகனுக்கு வாய்ப்பு கேட்டுள்ளேன்'- ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்

ஈவிகேஎஸ் இளங்கோவன்
ஈவிகேஎஸ் இளங்கோவன்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி போட்டியிட உள்ள நிலையில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் இளைய மகன் சஞ்சய் சம்பத் வேட்பாளராக அறிவிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், ``ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நான் போட்டியிடவில்லை. தனக்கு உடல்நிலையும் சரியில்லை. மனநிலை பாதிப்பில் இருந்து இன்னும் மீண்டு வரவில்லை. இடைத்தேர்தலில் இளைஞர் ஒருவரை வேட்பாளராக காங்கிரஸ் அறிவிக்க வேண்டும்.

தனது இளைய மகன் சஞ்சய் சம்பத்துக்கு வாய்ப்பு தருமாறு கட்சி தலைமையிடம் கோரிக்கை வைத்து ளேன். வேறு சிலரும் வேட்பாளர் தேர்வில் இருந்தாலும் கட்சி தலைமை என்ன முடிவு எடுக்கிறதோ அதை ஏற்றுக்கொள்வேன்.

காங்கிரஸ் கட்சி வாய்ப்பு கொடுத்தால் தனது மகன் சஞ்சய் சம்பத் போட்டியிடுவார். காங்கிரஸ் வேட்பாளரை இன்னும் 2 நாளில் அகில இந்திய காங்கிரஸ் தலைமை அறிவிக்கும்'' என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in