`ஜல்லிக்கட்டு வெற்றியில் எனக்கும் பங்குள்ளது'- வரிசையில் வந்த தமிழிசை!

ஆளுநர் தமிழிசை
ஆளுநர் தமிழிசை ஜல்லிக்கட்டு வெற்றியில் எனக்கும் பங்குள்ளது வரிசையில் வந்த தமிழிசை!

தமிழக பாஜக தலைவராக இருக்கும் போது டெல்லியில் முகாமிட்டு மத்திய அமைச்சர்களிடம் கோரிக்கை வைத்தும்,தொடர்ந்து வலியுறுத்தியும் மூன்று மத்திய அமைச்சர்கள் ஒரே நாளில் கையெழுத்திட்டு அவசர சட்டம் இயற்றி தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு மீண்டும் தமிழகத்தில் நடைபெற்றது என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

உச்சநீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு ஜல்லிக்கட்டிற்கு தடை விதிக்க முடியாது என அறிவித்துள்ள நிலையில், அந்த தீர்ப்பு எங்களுக்கு கிடைத்த வெற்றி என திமுக, அதிமுக, பாமக என வரிசையாக அறிக்கை விடத் தொடங்கியுள்ளன. இந்த நிலையில் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சார்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ஜல்லிக்கட்டு மீதான தடையை முழுவதுமாக நீக்குவதற்கு காரணமாக இருந்த வரலாற்று நாயகன் பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி.

ஜல்லிக்கட்டு மீதான தடையை முழுவதுமாக நீக்க காரணமாக இருந்த வரலாற்று நாயகன் பிரதமர் நரேந்திர மோடிக்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்வதாக தெரிவித்துள்ளார்.

மேலும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் தீவிர நடவடிக்கைகளால்தான் உச்ச நீதிமன்றத்தில் ஜல்லிக்கட்டு தடை முழுவதுமாக நீக்கப்பட்டுள்ளது.

திமுக -காங்கிரஸ் கூட்டணியில் மத்திய அமைச்சராக இருந்த ஜெயராம் ரமேஷ் காளைகளை காட்சிப்படுத்தப்பட்ட விலங்கியல் பட்டியலில் சேர்த்ததின் காரணமாக ஜல்லிக்கட்டுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்த போது அப்போது தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன் டெல்லியில் முகாமிட்டு மத்திய அமைச்சர்களிடம் கோரிக்கை வைத்தும், தொடர்ந்து வலியுறுத்தியும் மூன்று மத்திய அமைச்சர்கள் ஒரே நாளில் கையெழுத்திட்டு அவசர சட்டம் இயற்றி தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு மீண்டும் தமிழகத்தில் நடைபெற்றது.

உச்ச நீதிமன்றத்தால் ஜல்லிக்கட்டு தடை நீக்கப்பட்டதற்கு தமிழிசை சௌந்தரராஜன் அவர்களின் கடந்த கால பங்களிப்பும் உள்ளது’’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in