‘என்னை கர்நாடக முதல்வராக்கவே நீங்கள் உங்கள் வாக்குகளை அளித்தீர்கள், ஆனால்…’ : டி.கே சிவக்குமார் ஆதங்கம்!

டி.கே.சிவக்குமார்
டி.கே.சிவக்குமார்‘என்னை கர்நாடக முதல்வராக்கவே நீங்கள் உங்கள் வாக்குகளை அளித்தீர்கள், ஆனால்…’ : டி.கே சிவக்குமார் ஆதங்கம்!

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் காந்தி குடும்பத்தினரின் ஆலோசனையை ஏற்று முதல்வர் பதவியை கைவிட்டேன் என்று தனது கனகபுரா தொகுதி மக்களிடம் கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் கூறினார்.

கர்நாடகாவின் துணை முதலமைச்சராக பதவியேற்ற பிறகு முதல் முறையாக இன்று தனது கனகபுரா தொகுதிக்கு வந்தார் டிகே சிவக்குமார். அவருக்கு மக்கள் உற்சாகமான வரவேற்பை அளித்தனர். அதனைத் தொடர்ந்து தொகுதி மக்களிடம் பேசிய அவர், “என்னை கர்நாடக முதல்வராக பார்க்க வேண்டும் என்ற உங்கள் ஆசை நிறைவேறவில்லை. மக்களே பொறுமையாக இருங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன். என்னை கர்நாடக முதல்வராக ஆக்குவதற்கு நீங்கள் உங்கள் வாக்குகளை அளித்துள்ளீர்கள் என்பது எனக்குத் தெரியும். ஆனால் என்ன செய்வது? உயர் கட்டளையின் வார்த்தைகளுக்கு நான் தலை வணங்க வேண்டியிருந்தது. ராகுல் காந்தி, சோனியா காந்தி மற்றும் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் என்னை பின்வாங்குமாறு அறிவுறுத்தினர்” என்று கூறினார்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in