குடும்பத்தலைவிகளுக்கு ரூ.1,000 உதவித்தொகை நான் தந்த யோசனை... கமல் பரபரப்பு தகவல்!

 நடிகர் கமல்ஹாசன்
நடிகர் கமல்ஹாசன்

குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1,000 உதவித்தொகை நான் தந்த யோசனை என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

சென்னை லயோலா கல்லூரியில் நடைபெற்று வரும் ஆண்டு விழா நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய மநீம தலைவர் கமல்ஹாசன், “மாணவர்கள் அரசியலுக்கு வந்துவிட்டால் ஜனநாயகம் வாழும். உங்களுக்கெல்லாம் வாக்களிக்கும் வயது வந்துவிட்டது. கையில் மை வைக்கப்படுவதற்கு முன் யாரைத் தேர்தெடுக்கிறோம் என்ற விழிப்புணர்வு வேண்டும். இந்தி ஒழிக அல்ல... தமிழ் வாழவேண்டும் என்றே கூறுகிறேன். நீங்கள் அரசியலுக்கு வரவில்லை என்றால் அரசியல் உங்கள் வாழ்க்கையில் வந்து விடும். மாணவர்கள் அரசியலுக்கு வந்துவிட்டால் வேறு வழியின்றி ஜனநாயகத்தை வாழட்டும் என்று விட்டு விட்டு விலகிவிடுவார்கள்.

குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1,000 உதவித்தொகை நான் தந்த யோசனை. எனது யோசனையை தமிழக அரசு எடுத்துக் கொண்டாலும் பொறாமைப்படாமல் பாராட்டுகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in