`உங்களை நினைத்து நான் வருத்தப்படுகிறேன்'- யாரை சொல்கிறார் முதல்வர் ஸ்டாலின்

`உங்களை நினைத்து நான் வருத்தப்படுகிறேன்'- யாரை சொல்கிறார் முதல்வர் ஸ்டாலின்

"அரைவேக்காடான வீண் விமர்சனங்களுக்கு நான் பதில் சொல்லி நேரத்தை வீணடிப்பதில்லை" என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் காட்டமாக பேசினார்.

கரூர் மாவட்டத்தில் 581.44 கோடி மதிப்பிலான புதிய திட்டப்பணிகளுக்காக அடிக்கல் நாட்டி, 28.60 கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்டப்பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்து பேசுகையில், ஓராண்டு கால ஆட்சி மனநிறைவு தருகிறது என்றும் திமுக ஆட்சியில் மக்கள் மகிழ்ச்சியாக இருப்பதை காணமுடிகிறது என்றும் கூறினார்.

மானத்தை பற்றி கவலைப்படாத மனிதர்களின் விமர்சனங்களுக்கு பதிலளிக்க விரும்பவில்லை என்றும் அரைவேக்காடான வீண் விமர்சனங்களுக்கு நான் பதில் சொல்லி நேரத்தை வீணடிப்பதில்லை என்றும் காட்டமாக பேசினார் முதல்வர்.

மேலும் அவர் பேசுகையில், "என்னை எதிர்த்து கருத்து சொன்னால் பிரபலம் அடையலாம் அப்படி நினைப்பவர்களை பார்த்து நான் வருத்தப்படுகிறேன். நான் கோடிக்கணக்கான தமிழ் மக்களின் வீட்டில் விளக்காக இருக்க வேண்டும், அவர்களின் வீட்டில் விளக்கை ஏற்ற வேண்டும் என்று விரும்புகிறவன். அதுவும் சாதாரண விளக்காக அல்ல. அறிவு விளக்காக, அன்பு விளக்காக, சேவை விளக்குகளாக, மற்றவர்களுக்கு பயன்படக்கூடிய விளக்காக அமைய வேண்டும் என்று நினைக்கிறேன். தமிழ்நாட்டு மக்கள் என்னை முதல்வர் நாற்காலியில் அமர வைத்திருப்பதன் காரணம் என்ன? நல்லது செய்வார் என்ற நம்பிக்கையில்தான். அந்த நம்பிக்கையை எந்நாளும் காப்பாற்றுவேன்" என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in