சிறுமி டான்யாவுடன் புன்னகையைப் பரிமாறிக் கொண்டேன்: நெகிழ்ச்சியை ஏற்படுத்திய முதல்வர் ஸ்டாலினின் ட்விட்

சிறுமி டான்யாவுடன் புன்னகையைப் பரிமாறிக் கொண்டேன்: நெகிழ்ச்சியை ஏற்படுத்திய முதல்வர் ஸ்டாலினின்  ட்விட்

முகச்சிதைவு நோய்க்கு சிகிச்சைப் பெற்று வரும் சிறுமி டான்யாவை அன்புடன் நலம் விசாரித்து, புன்னகையைப் பரிமாறிக் கொண்டதாக தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

டான்யா
டான்யா

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த வீராபுரத்தில் வசிக்கும் 9 வயது சிறுமி டான்யா, அரிய வகை முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு தமிழக அரசு உதவிட வேண்டும் என்று அவரது பெற்றோர் வேண்டுகோள் விடுத்திருந்தனர். இதையடுத்து தமிழக அரசு உத்தரவின் பேரில், அரசு மருத்துவ குழுவினர் சிறுமி டான்யாவைப் பரிசோதித்தனர். இதன் பிறகு தண்டலத்தில் உள்ள சவீதா மருத்துவமனையில் டான்யா அனுமதிக்கப்பட்டார். ஆக.23-ம் தேதி சிறுமிக்கு 9 மணி நேர உடல் ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

சிகிச்சைக்கு பிறகு, சிறுமியின் தாயாரை முதல்வர் ஸ்டாலின் போனில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார். மேலும், சிறுமியை நேரில் வந்து பார்ப்பதாகவும் அவர் உறுதியளித்திருந்தார். அதன்படி, நேற்று அமைச்சரவை கூட்டம் முடிந்த பிறகு, சவீதா மருத்துவமனைக்கு சென்ற முதல்வர் ஸ்டாலின், சிறுமி டான்யாவை சந்தித்து நலம் விசாரித்தார். அப்போது சிறுமியின் தாயார் கண்ணீர் மல்க முதல்வருக்கு நன்றி தெரிவித்தார். அவருக்கு ஆறுதல் தெரிவித்த முதல்வர் ஸ்டாலின், சிறுமி விரைந்து நலம் பெற வாழ்த்தினார்.

சிறுமி டான்யாவை சந்தித்தது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், சிறுமியிடம் அன்புடன் நலம் விசாரித்து, புன்னகையைப் பரிமாறிக் கொண்டதாக தெரிவித்துள்ளார். வலுவான நம்முடைய மருத்துவக் கட்டமைப்பால், இது சாத்தியமாகியுள்ளது என்றும் நம் மருத்துவக் கட்டமைப்பைக் காத்து, புன்னகைகளைப் பரிசாகப் பெறுவோம் என்றும் கூறியுள்ளார். அவரின் நெகிழ்வூட்டும் இந்தப் பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in