நான் மாட்டிறைச்சி சாப்பிடுகிறேன், அதனால் கட்சிக்கு எந்த பிரச்சினையும் இல்லை: பாஜக தலைவர் அதிரடி

எர்னஸ்ட் மவ்ரி
எர்னஸ்ட் மவ்ரிநான் மாட்டிறைச்சி சாப்பிடுகிறேன், அதனால் கட்சிக்கு எந்த பிரச்சினையும் இல்லை: பாஜக தலைவர் அதிரடி

மேகாலயா மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பாஜக மாநிலத் தலைவர் எர்னஸ்ட் மவ்ரி, பாஜக கட்சியைச் சேர்ந்தவர்கள் யாரேனும் மாட்டிறைச்சி சாப்பிட்டால் பிரச்சினை இல்லை என்று கூறியுள்ளார். தானும் மாட்டிறைச்சி சாப்பிடுவதாகவும், அது கட்சிக்குத் தெரியும் என்றும் தெரிவித்தார்.

ஒரு தனியார் ஊடகத்திடம் பேசிய மேகாலயா பாஜக மாநிலத் தலைவர் எர்னஸ்ட் மவ்ரி, " நான் மாட்டிறைச்சி சாப்பிடுவேன், அதில் கட்சிக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை பாஜக எந்த ஜாதி, மதம், மத நம்பிக்கைகள் பற்றி நினைப்பதில்லை. நாம் எதை வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். அது நமது உணவுப் பழக்கம். அதனால் ஒரு அரசியல் கட்சிக்கு ஏன் பிரச்சினை வர வேண்டும்?. மேகாலயாவில் அனைவரும் மாட்டிறைச்சி சாப்பிடுகிறார்கள், இதற்கு மாநிலத்தில் எந்த கட்டுப்பாடுகளும் இல்லை. இது நமது பழக்கம் மற்றும் கலாச்சாரம்" என்று பசுவதை தொடர்பான பாஜகவின் நிலைப்பாடு குறித்து கருத்து தெரிவித்தார்.

மேகாலயா மாநில சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, பாஜக கட்சியின் வெற்றிபெறும் என நம்பிக்கையை வெளிப்படுத்திய மவ்ரி, மேகாலயாவில் பாஜக, என்பிபி மற்றும் யுடிபி இடையே மும்முனைப் போட்டி இருக்கிறது என்று கூறினார். அவர், "வரும் தேர்தலில் குறைந்தபட்சம் 34 இடங்களையாவது வெல்வோம், இதுவே எங்களின் கணிப்பு, எங்களுக்கு வாக்களிக்கிறார்களா இல்லையா என்பது இப்போது மக்களின் முடிவு. மாநிலத்தில் அமைதி மற்றும் வளர்ச்சியை மக்கள் விரும்பினால், அவர்கள் கண்டிப்பாக பாஜகவுக்கு மாநிலத்தை ஆள ஒரு வாய்ப்பு வழங்க வேண்டும்" என்று கூறினார்.

60 தொகுதிகளைக் கொண்ட மேகாலயா சட்டமன்றத் தேர்தல் பிப்ரவரி 27, 2023 அன்று நடைபெற உள்ளது, இதன் முடிவுகள் மார்ச் 2 ம் தேதி அறிவிக்கப்படும். இத்தேர்தலில் பாஜக தனித்துப் போட்டியிடுகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in