சசிகலாவை கட்டாயப்படுத்தி வாக்குமூலம் பெற விரும்பவில்லை: சொல்கிறார் ஆறுமுகசாமி


சசிகலாவை கட்டாயப்படுத்தி வாக்குமூலம் பெற விரும்பவில்லை: சொல்கிறார் ஆறுமுகசாமி

ஜெயலலிதா மரணம் தொடர்பாக சசிகலாவை கட்டாயப்படுத்தி வாக்குமூலம் பெற விரும்பவில்லை ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி கூறினார்.

தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் 2017 செப்டம்பர் மாதம் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. மூன்று மாதத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய அறிவுறுத்தப்படது. ஆனால், 14 முறை ஆணையத்திற்கு கால அவகாசம் வழங்கப்பட்டது. 158 பேரிடம் ஆணையம் தனது விசாரணையை நிறைவு செய்தது.

இந்த அறிக்கையை தமிழக முதல்வர் ஸ்டாலினை சென்னை தலைமை செயலகத்தில் சந்தித்து ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி இன்று வழங்கினார். இதன் பின் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், " ஜெயலலிதா மரணத்தில் மர்மம் உள்ளதா என்பதை பற்றி சொல்ல முடியாது. அத்துடன் ஆணையத்தின் அறிக்கை குறித்த தகவல்களையும் வெளியிட முடியாது .அப்பல்லோ அறிக்கை வெளியானது ஒருவர் செய்த விளம்பர உத்தி. அறிக்கையை வெளியிடுவதா கூடாதா என்பதை அரசு தான் முடிவு செய்ய வேண்டும்.

அப்பல்லோ நிர்வாகம் விசாரணையில் முழு ஒத்துழைப்பு வழங்கியது. அதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். சசிகலாவை கட்டாயப்படுத்தி வாக்குமூலம் பெற விரும்பவில்லை. இதனால் விசாரணைக்கு ஆஜராவதில் உடன்பாடு இல்லை என எழுத்துப்பூர்வமாக பெற்றுக்கொண்டு அவருக்கு விலக்கு அளிக்கப்பட்டது. ஆணையம் அறிக்கையை தாக்கல் செய்ய தாமதமானதற்கு என்னை காரணம் சொல்வது சரி அல்ல" என்று கூறினார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in