நானும் திராவிடன் தான்: சொல்கிறார் அண்ணாமலை

நானும் திராவிடன் தான்: சொல்கிறார் அண்ணாமலை

"நானும் திராவிடன் தான். திமுக, அதிமுகவில் இருப்பவர்கள் எங்கள் உறவினர்கள்தான்" என்று பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தில், ஏப்ரல் 11-ம் தேதி மானியக் கோரிக்கையின் மீது அதிமுக சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையின் பேசினார். அப்போது, " தமிழ்நாட்டை திராவிட இயக்கங்களைத் தவிர்த்து வேறு எவராலும் ஆள முடியாது" என்று அவர் வலியுறுத்திப் பேசினார்.

இந்த நிலையில் கோவையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, அவர் கூறுகையில், " தமிழகத்தைத் திராவிட இயக்கங்களைத் தவிர்த்து வேறு எவராலும் ஆள முடியாது என செங்கோட்டையன் பேசியுள்ளார். திராவிட இயக்கம் என்பதற்கு விளக்கம் தேவை. நானும் திராவிடன்தான். திமுக, அதிமுகவில் இருப்பவர்கள் எங்கள் உறவினர்கள்தான். தமிழகத்தைச் சாராதவர்கள் ஆட்சி அமைக்க முடியாது என்பதை வேண்டுமானால் ஏற்கலாம். ஆனால், திராவிட இயக்கம்தான் ஆளும் என்பதை ஏற்க முடியாது" என்று கூறினார்.

மேலும் அவர் கூறுகையில், " பாஜகவினர் மண்ணைச் சார்ந்த தொழில் செய்கிறோம். அதிமுக, திமுகவில் எவ்வளவு பேர் மண்சார்ந்த தொழில் செய்கின்றனர்? அவர்கள் துபாய் , வெளிநாடுகளில் தான் தொழில் செய்கின்றனர். தமிழகத்தில் 2026-ம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் 150 தொகுதிகளைப் பாஜக பிடிக்கும். சட்டப்பேரவையில் தேவையில்லாத விவகாரங்களைப் பாஜகவினர் பேசுகின்றனர் என்று சொல்வதற்கு முதல்வருக்கு என்ன தகுதி உள்ளது? பாஜகவிற்கு பாடம் எடுக்க எந்த தகுதியும் முதல்வர் ஸ்டாலினுக்கு இல்லை" என்று அண்ணாமலை கூறினார்.

Related Stories

No stories found.