’கலைஞரின் செல்ல மகள் நான்’ -ராதிகா நெகிழ்ச்சி!

 நடிகை ராதிகா
நடிகை ராதிகா’கலைஞரின் செல்ல மகள் நான்’ - நடிகை ராதிகா!

’’கலைஞரின் செல்ல மகளாக திமுக விழாவில் பங்கேற்கிறேன்; என் தந்தை எம்.ஆர்.ராதாவுக்கும் கலைஞருக்கும் இடையேயான நட்பு மிகவும் அற்புதமானது’’ என நடிகை ராதிகா தெரிவித்துள்ளார்.

வடசென்னை திமுக சார்பில் மகளிர் தின சிறப்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் நடிகை ராதிகா பங்கேற்றார். இந்தவிழாவில் நடிகை ராதிகா பேசும்போது, ‘’கலைஞரின் செல்ல மகளாக திமுக சார்பில் நடைபெறும் விழாக்களில் பங்கேற்கிறேன். கலைஞரிடம் இருந்து பல பயிற்சிகளை பெற்றது எனக்கு நினைவுக்கு வருகிறது. அவர்களின் குடும்பத்தில் நானும் ஒருத்தியாக இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

அதேபோல கலைஞருக்கும் எனது அப்பா எம்.ஆர். ராதாவுக்குமான நட்பு மிகவும் அற்புதமானது. பெண்கள் தலை நிமிர்ந்து செயல்பட கல்வி மிகவும் அவசியமாகிறது. வீடு, அலுவலகம் என சுழன்று பணிபுரியும் பெண்கள் தங்கள் உடல் நலத்தை பேணி காக்க வேண்டும். வலிகள் இருந்தால் தான் வாழ்வில் வெற்றிப் பெற முடியும் ‘’என்று பேசினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in