'நான் எமர்ஜென்சி கதவு அருகே அமர்ந்திருக்கிறேன், ஆனால்..!'- தயாநிதி மாறன் வெளியிட்ட வீடியோ

'நான் எமர்ஜென்சி கதவு அருகே அமர்ந்திருக்கிறேன், ஆனால்..!'- தயாநிதி மாறன் வெளியிட்ட வீடியோ

"நான் எமர்ஜென்சி கதவு அருகே அமர்ந்திருக்கிறேன். ஆனால் நான் அதை திறக்க மாட்டேன். அது பயணத்திற்கும், பயணிகளுக்கும் நல்லதல்ல" என்று திமுக எம்பி தயாநிதிமாறன் வெளியிட்டுள்ள வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் அமைச்சர் செந்தில் பாலாஜி.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அண்மையில் இன்டிகோ விமானத்தில் பயணம் செய்யும்போது ஜன்னல் ஓரத்தில் இருந்த எமர்ஜென்சி கதவை திறந்ததாக குற்றச்சாட்டு இருந்தது. இது தொடர்பாக விமான போக்குவரத்து ஆணையத்திடம் அவர் மன்னிப்பு கேட்டதாகவும் கூறப்பட்டது. இது தொடர்பாக தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டிருந்தார். இதற்கும் அண்ணாமலை பதில் அளித்தார்.

இந்த நிலையில் திமுக எம்பி தயாநிதி மாறன், இன்று இன்டிகோ விமானத்தில் பயணம் செய்துள்ளார். அதோடு, ஜன்னல் ஓரத்தில் உள்ள எமர்ஜென்சி கதவு அருகே உட்கார்ந்து இருந்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி பதிவிட்டு இருக்கிறார். அதில், 'நான் எமர்ஜென்சி கதவு அருகே அமர்ந்திருக்கிறேன். ஆனால் நான் அதை திறக்க மாட்டேன். அது பயணத்திற்கும், பயணிகளுக்கும் நல்லதல்ல'- இன்டிகோ விமானத்தில் பயணம் செய்த மாண்புமிகு மக்களவை உறுப்பினர் அண்ணன் தயாநிதிமாறன் என்று கூறியிருக்கிறார்.

விமானத்தின் எமர்ஜென்சி கதவை அண்ணாமலை திறந்தது சர்ச்சையான நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக திமுக எம்பி தயாநிதிமாறன் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in