`நான் இயேசு கிறிஸ்து கிடையாது; பதிலுக்கு அடிப்பேன்'- அண்ணாமலை ஆவேசம்

`நான் இயேசு கிறிஸ்து கிடையாது; பதிலுக்கு அடிப்பேன்'- அண்ணாமலை ஆவேசம்

"ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தை காட்டிவிட்டு அடியுங்கள் என்று சொல்ல நான் இயேசு கிறிஸ்து கிடையாது. நான் பதிலுக்கு அடிப்பேன்" என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆவேசமாக பேசினார்.

தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனுக்கும், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கும் இடையே வார்த்தைப் போர் நடந்து வருகிறது. ஒருவரை ஒருவர் ட்விட்டரில் கடுமையாக பேசி வருகின்றனர். இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்ணாமலையின் செயலை பலரும் கண்டித்து வருகின்றனர்.

இது குறித்து சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, "நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விஷயத்தைப் பொறுத்தவரை திமுக அதன் பழைய அரசியல் பாணியில் இருந்து வெளியே வர வேண்டும். மிரட்டி விடலாம், உருட்டி விடலாம், இந்த பையன் கிராமத்தில் இருந்து வந்திருக்கான் என்று நினைக்காதீர்கள். நாளைக்கே கழுத்தில் துண்டைப் போட்டு என்னுடைய விவசாய நிலத்தில் இறங்கி வேலை செய்வேன். உங்களால் முடியுமா? இல்லை முதல்வர் ஸ்டாலினால் முடியுமா? எனக்கு அந்த துணிவு இருக்கிறது, தைரியம் இருக்கிறது. என்னால் காட்டில் கட்டிப்போட்டு போய் தூங்க முடியும். நீங்க ஏசியை ஆப் பண்ணி விட்டு கிராமத்துக்கு வாங்க பார்க்கலாம். உங்களால் முடியாது. எனக்கு விவசாயமும், ஆடும், தோட்டமும் இருக்கிறது. மரியாதையாக திமுக அரசியல் செய்தால் நாங்களும் மரியாதையாக இறங்கி வருவோம். தனிப்பட்ட முறையில் விமர்சனமோ, தனிப்பட்ட முறையில் தரம் தாழ்ந்து பேசினால் அதற்கு பதிலடி கொடுப்பேன்.

இந்தப் பையன் கிராமத்தில் இருந்து வந்திருக்கிறான். சாதாரண பையன். எனக்கு பெரிய பவர் இருக்கு என்று மிரட்டி பார்த்தால் என் பதிலடி வேற மாதிரி இருக்கும். என்னை மிரட்டி பார்க்க முடியாது. சமூக நீதி பேசும் திமுக, முதல் தலைமுறை பட்டதாரிகள் எத்தனை பேருக்கு வாய்ப்பு கொடுத்து இருக்கிறது. அதில் யாராவது தலையெடுத்து வந்தால் அவர்களை தகாத வார்த்தையில் பேசுவீர்கள், ஆபாச வார்த்தைகளை பேசுவீர்கள். இதையெல்லாம் கேட்டுக்கிட்டு இருக்க நான் இயேசு கிறிஸ்து கிடையாது. ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தை காட்டிவிட்டு அடியுங்கள் என்று சொல்ல. நான் பதிலுக்கு அடிப்பேன். எதை இழந்தாலும் அதை பற்றி கவலைப்பட போவது கிடையாது" என்றார் காட்டமாக.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in