`எம்எல்ஏவாக நிரூபித்து காட்டினார்; அமைச்சராக நிரூபிப்பார்'- உதயநிதி மீது முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை

`எம்எல்ஏவாக நிரூபித்து காட்டினார்; அமைச்சராக நிரூபிப்பார்'- உதயநிதி மீது முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை

``அமைச்சர் பொறுப்பினை சிறப்பாக பணியாற்றி இந்த துறைகளை உதயநிதி மேம்படுத்துவார் என்ற நம்பிக்கை எனக்கு அதிகமாக இருக்கிறது. மேம்படுத்த வேண்டும் என்பது முதலமைச்சராக நம்பிக்கையோடு எதிர்பார்க்கிறேன்" என்று முதல்வர் ஸ்டாலின் கூறினார்.

திருச்சியில் 655 கோடியில் 5,639 புதிய திட்ட பணிகளை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். மேலும் 308 கோடி மதிப்பீட்டில் 5,951 புதிய திட்ட பணிகளுக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார். மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்குக் கடனுதவிகள், விருதுகள் வழங்கி விழா பேசிய முதல்வர் ஸ்டாலின், "உதயநிதி அமைச்சராக பதவியேற்ற பின்னர் விமர்சனம் வந்தது. வரத்தான் செய்யும். இப்படி விமர்சனங்கள் வந்தபோது என்னுடைய செயல்பாட்டை பாருங்கள். அதன் பிறகு விமர்சனம் செய்யுங்கள் என்பார். அவர் சட்டமன்ற உறுப்பினராக பொறுப்பேற்ற போது விமர்சனங்கள் வந்தது. ஆனால் அதற்கெல்லாம் தன்னுடைய செயல்பாடுகளால் பதில் சொல்லி அனைவரது பாராட்டையும் பெற்றார். தன்னை நிரூபித்துக் காட்டினார்.

உதயநிதிக்கு ஏராளமான பொறுப்புகள் இருக்கிறது. இளைஞர் நலன், விளையாட்டு, மகளிர் மேம்பாடு, சிறப்பு திட்ட செயலாக்கம், வறுமை ஒழிப்பு, கிராமப்புற வளங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. இவை அனைத்தும் தமிழ்நாட்டில் ஏழை எளிய மக்களை மேம்படுத்தக்கூடிய துறை அவரிடத்தில் ஒப்படைக்கப்பட்டு இருக்கிறது. அமைச்சர் பொறுப்பினை சிறப்பாக பணியாற்றி இந்த துறைகளை மேம்படுத்துவார் என்ற நம்பிக்கை எனக்கு அதிகமாக இருக்கிறது. மேம்படுத்த வேண்டும் என்பது முதலமைச்சராக நம்பிக்கையோடு எதிர்பார்க்கிறேன்" என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in