காங்கிரஸ் மற்றும் பாரத் ராஷ்டிர சமிதி கட்சிகள் ஹைதராபாத்தை ஏஐஎம்ஐஎம் கட்சிக்கு "குத்தகைக்கு" விட்டுள்ளதாக கூறிய பிரதமர் மோடிக்கு கடுமையாக பதிலடி கொடுத்துள்ள அசாதுதீன் ஓவைசி, “ஹைதராபாத் மக்கள் கால்நடைகளோ அல்லது அரசியல் கட்சிகளின் சொத்துக்களோ அல்ல” என்று கூறியுள்ளார்.
பிரதமர் மோடி பேசிய வீடியோ கிளிப்பை எக்ஸ் தளத்தில் பகிர்ந்து கொண்ட ஒவைசி, ‘தெலங்கானாவுக்கு வந்த மோடி, ஹைதராபாத் தொகுதியை ஓவைசிக்கு குத்தகைக்கு கொடுத்துள்ளதாக கூறினார். ஹைதராபாத் மக்கள் கால்நடைகள் அல்ல. நாங்கள் குடிமக்கள், அரசியல் கட்சிகளின் சொத்து அல்ல. நாற்பது ஆண்டுகளாக ஹைதராபாத் இந்துத்துவாவின் தீய சித்தாந்தத்தை தோற்கடித்துள்ளது. இப்போது மீண்டும் ஏஐஎம்ஐஎம் இந்துத்துவாவை தோற்கடிக்கும்.
மோடி தனது கட்சிக்கு தேர்தல் பத்திரங்கள் மூலம் ரூ6,000 கோடி கொடுத்தவர்களிடம், அதற்கு ஈடாக இந்தியாவின் சொத்துக்களை குத்தகைக்கு விட்டுள்ளார். நாட்டில் மொத்தமுள்ள 70 கோடி இந்தியர்களை விட இன்று 21 பேரிடம் அதிக சொத்துக்கள் உள்ளது, இதுதான் அவரது உண்மையான ஆட்சி’ என்று தெரிவித்துள்ளார்.
நேற்று தெலங்கானா மாநிலம் கரீம்நகரில் தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய மோடி, "இத்தனை ஆண்டுகளாக, இந்த இரண்டு கட்சிகளும் (காங்கிரஸ் மற்றும் பிஆர்எஸ்) ஹைதராபாத்தை ஏஐஎம்ஐஎம்-க்கு குத்தகைக்கு கொடுத்துள்ளன. யாராவது முதல்முறையாக ஏஐஎம்ஐஎம்-க்கு சவால் விட்டார் என்றால், அது பாஜக தான். ஏஐஎம்ஐஎம்-ஐ விட, காங்கிரஸும் பிஆர்எஸ்ஸும்தான் சவாலில் திணறி வருகின்றன. இவர்கள் இருவரும் ஏஐஎம்ஐஎம் ஹைதராபாத்தில் வெற்றி பெற உதவுகிறார்கள்," என்றார்.
மக்களவைத் தேர்தலில், ஹைதராபாத்தில் நான்கு முறை எம்.பி.யாக இருந்த ஓவைசிக்கு எதிராக மாதவி லதாவை பாஜக வேட்பாளராக நிறுத்தியுள்ளது, அதே நேரத்தில் பிஆர்எஸ் கதம் ஸ்ரீனிவாஸ் யாதவை வேட்பாளராக நிறுத்தியுள்ளது. தெலங்கானாவில் மே 13-ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
அதிர போகுது மதுரை... அரசியல் மாநாட்டிற்கு தேதி குறித்த விஜய்!
கோடை விடுமுறையில் சோகம்... ஏரியில் குளிக்கச் சென்ற 2 சிறுவர்கள் நீரில் மூழ்கி பலி!
ஹஜ் பயணிகளின் புனித பயணம் தொடங்கியது... டெல்லியில் இருந்து முதல் விமானம் புறப்பட்டது!
எஸ்எஸ்எல்சி மாணவர்களுக்கு குட்நியூஸ்ட்... பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு!
ரூ.90 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்... விமான நிலையத்தில் பரபரப்பு!