மு.க.ஸ்டாலின் பிறந்தநாள்: தொலைபேசியில் வாழ்த்து மழை பொழிந்தோர் இத்தனை லட்சமா?

முதல்வர் மு.க.ஸ்டாலின்
முதல்வர் மு.க.ஸ்டாலின்

முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளினை முன்னிட்டு அவருக்கு தொலைபேசி வாயிலாக 21,67,411 பேர் வாழ்த்து மழை பொழிந்திருக்கின்றனர்.

நேற்று முன்தினம்(மார்ச்.1) தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளினை முன்னிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவிக்க விரும்புவோருக்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அவற்றில் ஒன்றான தொலைபேசி வாயிலாக வாழ்த்து தெரிவிப்பதில், 21,67,411 பேர் பங்கேற்று வாழ்த்துகளை பதிவு செய்தனர். இதில் தமிழ்நாட்டுக்கு வெளியிலிருந்தும், நாடு கடந்தும் ஏராளமானோர் வாழ்த்துகளை பதிவு செய்தனர்.

மேலும் மெய்நிகர் வாயிலான செல்ஃபி எடுப்பதில் 16,75,484 பேர் பங்கேற்றனர். இதற்கான பிரத்யேக தளத்தை அணுகி முதல்வருடனான தற்படம் எடுத்து, அவற்றை தங்களது சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து மகிழ்ந்தனர்.

இவர்கள் அனைவருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது குரல் பதிவை பிரத்யேகமாக அனுப்பி நன்றி தெரிவித்துள்ளார். அந்த குரல் பதிவில் “வணக்கம். மு.க.ஸ்டாலின் பேசுகிறேன். எனது பிறந்தநாளுக்கு நீங்கள் தெரிவித்த வாழ்த்து வந்து சேர்ந்தது. மிகவும் மகிழ்ச்சி. உங்களைப் போன்று உலகமெங்கும் இருந்து வந்த அன்பான சகோதர சகோதரிகளின் வாழ்த்துகள் என்னை நெகிழ வைத்திருக்கிறது. உங்கள் அனைவருக்கும் அன்பான நன்றி. இந்த வேளையில் உங்கள் அனைவரின் நம்பிக்கை மற்றும் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் தொடர்ந்து செயல்படுவேன் என்று உறுதி கூறுகிறேன். நன்றி, வணக்கம்!” என பேச்சுவழக்கில், உற்சாகமாக பதில் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in