‘தேர்தல் அரசியலில் இருந்தே விலகுகிறேன்’ - அதிரடி அறிவிப்பை வெளியிட்ட ஹெச்.ராஜா; அதிர்ச்சியில் உறைந்த பாஜக!

ஹெச். ராஜா
ஹெச். ராஜா ‘தேர்தல் அரசியலில் இருந்தே விலகுகிறேன்’ - அதிரடி அறிவிப்பை வெளியிட்ட ஹெச்.ராஜா; அதிர்ச்சியில் உறைந்த பாஜக!

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் சிவகங்கை தொகுதியில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா, தான் தேர்தல் அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்து பரபரப்பை உருவாக்கியுள்ளார்.

சிவகங்கையில் பாஜக நிறுவனத் தினத்தையொட்டி நேற்று நடைபெற்றக் கூட்டத்தில் பேசிய ஹெச்.ராஜா, “வீடுகள்தோறும் மத்திய அரசின் திட்டங்களை கொண்டு சேர்க்க வேண்டும். நான் தேர்தல் அரசியலில் இருந்து விலகுகிறேன். ஆனால் சிவகங்கை மக்களவை தொகுதியில் பாஜக தான் போட்டியிடும். அதனால் இப்போதே தேர்தல் பணியை தொடங்க வேண்டும்” என்று தெரிவித்து பாஜகவினரை அதிர்ச்சியடைய வைத்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ பிரதமர் மோடி அமைச்சரவையில் பெண்கள், பட்டியலினத்தவர், பழங்குடியினர் அதிகளவில் இடம் பெற்றுள்ளனர். சமூக நீதியை பாஜகதான் காப்பாற்றி வருகிறது. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் இருந்து நல்ல எண்ணிக்கையில் பாஜகவுக்கு எம்பிகள் கிடைக்கும். தமிழகத்தில் சுறுசுறுப்பான கட்சியாக பாஜக உள்ளது. ஏப்ரல் 14ம் தேதி அமைச்சர்களின் ஊழல் பட்டியலை அண்ணாமலை வெளியிட்ட பின்னர் தமிழகத்தில் பல மாற்றங்கள் வரும். அதன்பிறகு திமுக ஆட்சி எவ்வளவு காலம் என்பது தெரியவரும்.

ஏற்கெனவே மக்களவை, சட்டப்பேரவைத் தேர்தல்கள் இணைந்து தான் நடைபெற்றன. அதை இந்திரா காந்தி தான் மாற்றினார். மேலும், மாநில ஆட்சியாளர்களின் ஸ்திரத் தன்மை இன்மையாலும் மாறியது. இனி ஒரே சமயத்தில் தேர்தல் நடத்த அரசியலமைப்பு சட்டத்தில் மாற்றம் கொண்டு வர வேண்டும். அதற்கு ஓராண்டுக்குள் சாத்தியம் இருக்குமா என்பது தெரியவில்லை. பழனிசாமி ஒன்றாக தேர்தல் நடக்கும் என்று நம்புகிறார். நடந்தால் நல்லது. சிவகங்கை தொகுதி எம்.பி யார் என்று எனக்கே மறந்துவிட்டது, மக்களுக்கு எப்படி ஞாபகம் இருக்கும். அந்த எம். பிக்கே சிவகங்கை தொகுதி மறந்திருக்கும்” என்று கூறினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in