ஈரோடு கிழக்கு தொகுதியில் இத்தனை பதற்றமான வாக்குச்சாவடிகளா?

ஈரோடு கிழக்கு தொகுதியில் இத்தனை பதற்றமான வாக்குச்சாவடிகளா?

ஈரோடு கிழக்குத் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ மறைவுக்குப் பின்பு, இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இடைத்தேர்தல் அடுத்த மாதம் 27-ம் தேதி நடக்கிறது. இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் எத்தனை வாக்குச்சாவடிகள் உள்ளன என்பது குறித்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஈரோடு கிழக்குத் தொகுதியில் 2 லட்சத்து 26 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர். ஈரோடு கிழக்குத் தொகுதியில் இடைத்தேர்தலுக்காக மொத்தம் 238 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட உள்ளன. இதில் 32 வாக்குச்சாவடி மையங்கள் பதட்டமானவை எனவும் கண்டறியப்பட்டு உள்ளன. 238 வாக்குச்சாவடி மையங்களுக்கு, 500 வாக்குப்பதிவு இயந்திரங்கள், யாருக்கு வாக்களித்தோம் என்பதைத் தெரிந்துகொள்ள வசதியாக விவிபேடு பயன்படுத்தப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

ஈரோடு கிழக்குத் தொகுதியில் 32 வாக்குச்சாவடி மையங்கள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டாலும், அவற்றில் 15 வாக்குச்சாவடி மையங்கள் கருங்கல்பாளையம் காவல்நிலைய ஆளுகைக்கு உட்பட்ட பகுதியிலேயே வருகிறது. இவை இதற்கு முன்னரே பதற்றம் நடந்த பகுதி என்ற அடிப்படையில் கணிக்கப்பட்டு இருக்கின்றன. இதற்குப் பின்பு ஈரோடு டவுண் காவல்நிலைய ஆளுகைக்கு உட்பட்ட பகுதியில் 13 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கணிக்கிடப்பட்டு உள்ளது. இந்த பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடி மையங்களில் மத்திய பாதுகாப்புப் படையினர் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in