ஓபிஎஸ் உடல்நிலை எப்படி உள்ளது?: எம்ஜிஎம் மருத்துவமனை திடீர் அறிக்கை

ஓபிஎஸ் உடல்நிலை எப்படி உள்ளது?: எம்ஜிஎம் மருத்துவமனை திடீர் அறிக்கை

கரோனா அறிகுறி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஓ.பன்னீர்செல்வம் உடல்நிலை சீராக உள்ளது என்று எம்ஜிஎம் மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது.

கரோனா அறிகுறி காரணமாக சென்னை எம்ஜிஎம் மருத்துவமனையில், அதிமுக ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்கட்சி துணைத்தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் நேற்று இரவு அனுமதிக்கப்பட்டார். அவர் விரைந்து நலம் பெற வேண்டும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, இயக்குநர் பாரதிராஜா உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வம் உடல் நிலை குறித்து எம்ஜிஎம் மருத்துவமனை இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், " தமிழக முன்னாள் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் லேசான கரோனா அறிகுறிகளுடன் 15-ம் தேதி தனிமைப்படுத்துதல் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது மருத்துவ வல்லுநர்கள் அடங்கிய குழுவின் கண்காணிப்பில் உள்ளார். அவரது உடல்நிலை சீராக உள்ளது" என்று கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in