பாமகவுக்கு மறுத்துவிட்டு திமுக பேரணிக்கு மட்டும் அனுமதி வழங்கியது எப்படி? - போலீசுக்கு ராமதாஸ் கேள்வி

திமுக வாகன பேரணி
திமுக வாகன பேரணி

''இல்லாத காரணங்களைக் கூறி, பாமகவின் இரு சக்கர ஊர்தி பேரணிக்கு அனுமதி மறுத்திருந்த தமிழக காவல்துறை, இப்போது தமிழகம் முழுவதும் திமுக இரு சக்கர ஊர்தி பேரணி நடத்த அனுமதி அளித்திருக்கிறது. இது எந்த வகையில் நியாயம்?’’ என பாமக நிறுவனர் கேள்வி எழுப்பியுள்ளார்.

திமுகவின் இளைஞரணி மாநாட்டையொட்டி, அக்கட்சியின் இளைஞரணி சார்பில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 8,647 கி.மீ நீளத்திற்கு இரு சக்கர ஊர்தி பேரணி கன்னியாகுமரியிலிருந்து இன்று அமைச்சர் உதயநிதி தொடங்கி வைத்தார். வரும் 27ம் நாள் வரை மொத்தம் 13 நாட்கள் நடைபெறும் இந்த பேரணியில் 188 இரு சக்கர ஊர்திகள் பங்கேற்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 ராமதாஸ்
ராமதாஸ்

இந்த நிலையில், திமுக வாகன பேரணிக்கு மட்டும் காவல்துறை அனுமதி வழங்கியது எப்படி என பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இதுத் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், `ஓர் அரசியல் கட்சியின் கொள்கையை விளக்குவதற்காக இத்தகைய பேரணிகள் நடத்தப்படுவது இயல்பானது; தேவையானது. ஆனால், இத்தகைய பேரணிகளுக்கு அனுமதி வழங்குவதில் தமிழக காவல்துறை இரட்டை நிலைப்பாட்டை மேற்கொள்வது ஏன்? என்பது தான் எனது வினா.

தமிழ்நாட்டில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற உன்னத கொள்கையை வலியுறுத்தி, கடந்த அக்டோபர் 5ம் நாள் தமிழ்நாடு முழுவதும் உள்ள ஒன்றிய, நகர, பேரூர் பகுதிகளில் இரு சக்கர ஊர்தி பேரணிகளை நடத்தும்படி பாட்டாளி மக்கள் கட்சியினருக்கு அழைப்பு விடுத்திருந்தேன்.

ஆனால், இல்லாத காரணங்களைக் கூறி, பா.ம.க.வின் இரு சக்கர ஊர்தி பேரணிக்கு அனுமதி மறுத்திருந்த தமிழக காவல்துறை, இப்போது தமிழ்நாடு முழுவதும் திமுக இரு சக்கர ஊர்தி பேரணி நடத்த அனுமதி அளித்திருக்கிறது. இது எந்த வகையில் நியாயம்?

மதுவிலக்கு பரப்புரைக்கான பேரணிக்கு அனுமதி மறுத்துவிட்ட காவல்துறை, இப்போது கட்சி மாநாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான பேரணிக்கு அனுமதி வழங்கியிருப்பது எந்த வகையில் நியாயம். திமுகவுக்கு ஒரு நீதி... பாமகவுக்கு ஒரு நீதியா?

தமிழக காவல்துறை அனைவருக்கும் பொதுவானது. அனைத்து அரசியல் கட்சிகளிடமும் ஒரே மாதிரியாக நடந்து கொள்ள வேண்டும். ஆளுங்கட்சியின் கைப்பாவையாக நடந்து கொள்ளக்கூடாது. தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் பாட்டாளி மக்கள் கட்சியின் இரு சக்கர ஊர்தி பேரணிக்கு தமிழக காவல்துறை உடனடியாக அனுமதி அளிக்க வேண்டும்’’ என கோரிக்கை விடுத்துள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...

மும்பை காவல் துறைக்கு திடீர் மிரட்டல்: இந்தியா - நியூசிலாந்து போட்டிக்கு பாதுகாப்பு அதிகரிப்பு!

நரி, அமுல் பேபி என தினேஷ்- விஷ்ணு மோதல்:பிக் பாஸ் இல்லத்தில் அதகளம்!

'பிரதமர் மோடிதான் சிறந்த நடிகர்' - நடிகர் பிரகாஷ்ராஜ் காட்டம்!

என்.சங்கரய்யா உடலுக்கு அரசு மரியாதை: தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

ஹிஜாப் அணிந்து தேர்வெழுத தடையா?: உயர் கல்வித்துறை அமைச்சர் விளக்கம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in