மதிக்காத அதிகாரிகள்... மனம்வெடித்த வேல்முருகன்!

வேல்முருகன்
வேல்முருகன்

பண்ருட்டி எம்எல்ஏ-வான வேல்முருகன் அரசு அதிகாரிகள் மீது மிகுந்த வருத்தத்தில் இருக்கிறார். அவரது தொகுதி சம்பந்தப்பட்ட விஷயங்களை அதிகாரிகள் அவரிடம் கூறுவது இல்லையாம், அழைப்பிதழ்களிலும் அவரது பெயரை போடாமல் விடுவதுடன் அரசு நிகழ்ச்சிகளுக்கும் சில நேரங்களில் அழைக்காமல் விட்டுவிடுகிறார்களாம்.

இதையெல்லாம் யாரிடம் சொல்லி பரிகாரம் தேடுவது என்று தெரியாமல் மறுகிக் கொண்டிருந்த வேல்முருகன் அண்மையில் அவரது தொகுதியில் நடந்த  ஆரம்ப சுகாதார நிலையம் திறப்பு விழாவில் அனைத்தையும் கொட்டித் தீர்த்துவிட்டாராம். அமைச்சர் வெ.கணேசன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனும் கலந்து கொண்டார். அந்த மேடையில் பேசிய வேல்முருகன், “உங்கள் தொகுதிக்கு என்ன தேவை என்று முதல்வர் என்னைக் கேட்கும் போதெல்லாம் அதிகாரிகள் என்னிடம் தொகுதி பிரச்சினையை குறித்து எதையும் தெரிவிக்காததால் அவரிடம் என்ன தேவை என்று உடனடியாக  சொல்ல இயலவில்லை. அதேபோல தொகுதியில் நடக்கும் நிகழ்ச்சிகளுக்கும் என்னை அழைப்பதில்லை. அதிகாரிகள் இன்னமும்  அதிமுக ஆட்சி நடக்கிறது என்ற நினைப்பில் தான் இருக்கிறார்கள்.  நான் மாற்றுக் கட்சியை சேர்ந்தவனாக இருந்தாலும் திமுக சட்டமன்ற உறுப்பினர் என்பதையே மறந்துவிட்டார்கள்” என்று வெடித்தாராம். அவரை சாந்தப்படுத்திய மா.சு., “உங்களின் மனக்குறையை கட்டாயம் முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்கிறேன்” என்று சொல்லிவிட்டுச் சென்றாராம்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in