பாட்டிக்கு வீடு வந்துருச்சு... படமெடுத்தவருக்கு வேலை போயிருச்சு!

ஜாக்சன் ஹர்பி
ஜாக்சன் ஹர்பி

கபடமற்ற சிரிப்பால் பிரபலம் ஆன வேலம்மாள் பாட்டிக்கு தமிழக அரசின் முதியோர் உதவித்தொகை, குடிசை மாற்று வாரிய வீடு ஆகியவை கிடைத்துவிட்டது. ஆனால், இத்தனைக்கும் அடிப்படைக் காரணமாக இருந்த புகைப்படக் கலைஞர் ஜாக்சன் ஹெர்பியோ நாகர்கோவில் மாநகராட்சியின் தற்காலிக புகைப்படக் கலைஞர் பணியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.

முதல்வருடன் ஜாக்சன் ஹெர்பி
முதல்வருடன் ஜாக்சன் ஹெர்பி

மாநகராட்சியின் செயல்பாடுகளைப் புகைப்படம் எடுத்துவந்த ஜாக்சன் ஹெர்பி, வெளிமாவட்ட அமைச்சர்கள் வரும்போது உள்ளூர் புள்ளிகளைக் கண்டுகொள்ளாமல், அவர்களைப் புகைப்படம் எடுப்பதிலேயே அதிக அக்கறைகாட்டினாராம். இந்தக் குற்றச்சாட்டைச் சொல்லி இவரை பணியிலிருந்து நீக்கி இருக்கிறது மாநகராட்சி நிர்வாகம்.

வேலம்மாள் பாட்டி
வேலம்மாள் பாட்டி

“வேலம்மாள் பாட்டி புகைப்படத்தைப் போல பேர் சொல்லும் படங்களை அரசுக்கு எடுத்துக்கொடுக்கத்தான் நான் மெனக்கிட்டேன்” என்று சொல்லும் ஜாக்சன், “வேலம்மாள் பாட்டிக்கு ஒரு விடிவு காலம் பிறந்தது போல் எனக்கும் ஒரு விடிவு பிறக்க வேண்டும்” என்று தமிழக முதல்வருக்கே தன்னிலையை எடுத்துச் சொல்லி உருக்கமாக கடிதம் எழுதி இருக்கிறாராம்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in