அண்ணாமலைக்கு செக் வைக்கும் வானதி சீனிவாசன்!

வானதி சீனிவாசன்
வானதி சீனிவாசன்அண்ணாமலையுடன் மோதும் வானதி சீனிவாசன்..!

அதிமுகவுடன் அண்ணாமலை மோதல் போக்கை கடைபிடிப்பதை தமிழக பாஜக தலைகள் பலரும் அவ்வளவாய் ரசிக்கவில்லையாம். அதிமுக தயவில்லாமல் தமிழகத்தில் தாமரை மலரவே முடியாது என்பதை தீர்க்கமாக உணர்ந்திருக்கும் அந்தத் தலைகள், இது விஷயமாக டெல்லி வரைக்கும் கவலை அறிக்கை வாசித்திருக்கிறார்களாம்.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தயவில் வென்ற வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன் போன்றவர்கள் இந்த விஷயத்தில் அண்ணாமலை செய்வது அத்தனை சரியில்லை என்ற கருத்தில் இருக்கிறார்களாம். கோவை தெற்கில் வாகை சூடிய வானதி சீனிவாசன், மக்களவைத் தேர்தலில் தனது விசுவாசிகளான கனகசபாபதி அல்லது செல்வகுமாரை கோவை தொகுதியில் நிறுத்தப் பிளான் போடுகிறாராம். ஒருவேளை, அது கைகூடி வந்தால் அதிமுக தயவில்லாமல் அங்கே எதுவும் செய்யமுடியாது என்பதை உணர்ந்திருக்கும் வானதி, அதிமுகவுடன் அண்ணாமலை வீண் வம்பு வளர்ப்பதால் தாங்கமுடியாத கொதிப்பில் இருப்பதாகச் சொல்கிறார்கள்.

பாஜக தேசிய தலைவர் நட்டா கிருஷ்ணகிரி வந்தபோது அண்ணாமலை விஷயமாக அவரிடம் வானதி பேசியதாகவும் கொங்கு மண்டலத்தில் ஒரு பேச்சு ஓடுகிறது. இந்த விவகாரம் அண்ணாமலை வட்டாரத்துக்குக் கசிந்ததால், அவர்கள் இப்போது வானதி மீது செம கடுப்பில் இருக்கிறார்களாம். யார், யாரை வீழ்த்தப் போகிறார்கள் என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in