வைத்தியை பலிகடா ஆக்கிடுவாரோ ஓபிஎஸ்?

வைத்திலிங்கம்
வைத்திலிங்கம்

ஒற்றைத் தலைமை விவகாரத்தால் ஓபிஎஸ் - ஈபிஎஸ் பிரியக் காரணம் வைத்திலிங்கம் தான் என சிலர் புதுக்கதை சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். அண்மையில் நாமக்கல்லில் கட்சியினர் மத்தியில் பேசிய முன்னாள் அமைச்சர் தங்கமணி, “அதிமுக ஒற்றுமையாக இருக்கக்கூடாது என்பது வைத்திங்கத்தின் திட்டம்; அதனை நிறைவேற்றிவிட்டார்” என கொளுத்திப்போட்டார். “ஓபிஎஸ் நல்லவர்தான், வைத்திலிங்கம் தான் கட்சிப் பிரிவுக்கு காரணம்” என்ற தொனியிலேயே பேசி இருந்தார் தங்கமணி. இந்த பகீர் குற்றச்சாட்டால் வைத்திலிங்கம் ரொம்பவே அப்செட் ஆகிப்போனாராம். தங்கமணி இப்படி பேசியபிறகு, ”கட்சி பிளவுக்குக் காரணம் வைத்திலிங்கம் தான்” என அதிமுகவுக்குள் பலரும் தூற்ற ஆரம்பித்திருக்கிறார்களாம். அதேசமயம், தங்கமணியின் பேச்சுக்கு ஓபிஎஸ் எவ்வித ரியாக்‌ஷனும் காட்டாததும் வைத்திக்கு வருத்தமாம். இதையெல்லாம் பார்த்துவிட்டு, ”நம்மாள பலிகடா ஆக்கிட்டு... ஓசையில்லாம ஓபிஎஸ் அந்தப் பக்கம் ஒதுங்கினாலும் ஒதுங்கிடுவாரோ?” என வைத்தி வட்டாரம் இப்போது சந்தேகக் கேள்வி எழுப்பிக் கொண்டிருக்கிறதாம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in