திருச்சி சிவா விவகாரம்; காற்றில் பறக்கிறதா கட்சிக் கட்டுப்பாடு?

திருச்சி சிவா வீட்டில் அமைச்சர் கே.என்.நேரு
திருச்சி சிவா வீட்டில் அமைச்சர் கே.என்.நேரு

திமுக எம்பி-யான திருச்சி சிவா வீட்டின் மீது தாக்குதல் நடத்திய அமைச்சர் நேருவின் ஆதரவாளர்கள் 5 பேரையும் கட்சியைவிட்டு நீக்கியது திமுக தலைமை. அதன்படி பார்த்தால் இவர்கள் 5 பேருடனும் திமுகவினர் யாரும் எந்தத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது.

ஆனால், உண்மை என்னவோ அப்படி இல்லை என்கிறார்கள். இந்த வழக்கில் கைதான ஐவரில் திருச்சி மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்களான காஜாமலை விஜி, முத்துச்செல்வம் ஆகியோரும் இருக்கிறார்கள். ஐவருக்கும் கடந்த 27-ம் தேதி ஜாமீன் கிடைத்து ரிலீஸ் ஆனதும், திருச்சி மாமன்றத்தில் முக்கியப் பொறுப்பில் இருக்கும் நேரு விசுவாசி ஒருவர் சிறை வாசலுக்கே சென்று ஐவரையும் தனது காரிலேயே அழைத்து வந்தாராம்.

இவர்கள் ஐவரும் தினமும் மதுரை தல்லாகுளம் காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்பது நீதிமன்றம் விதித்திருக்கும் நிபந்தனை. இந்த நிலையில், திருச்சி மாமன்றக் கூட்டம் தொடர்பாக திமுக கவுன்சிலர்களின் ஆலோசனைக் கூட்டம் கடந்த 28-ம் தேதி திருச்சியில் நடந்ததாம். அந்தக் கூட்டத்திலும் வழக்கில் இருக்கும் விஜியும் முத்துச்செல்வமும் கலந்து கொண்டார்களாம். “இது எப்படி... கட்சிக் கட்டுப்பாட்டை மீறி அவர்களை அந்தக் கூட்டத்துக்கு அழைத்தது யார்?” என சிவா தரப்பு இப்போது கேள்வி எழுப்பிக் கொண்டிருக்கிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in