ரூபிக்கு உடனே ஸ்டே கிடைத்தது இப்படித்தானாம்!

ரூபி மனோகரன்
ரூபி மனோகரன்

காங்கிரஸ் பொருளாளர் ரூபி மனோகரன் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்ட சில மணி நேரத்திலேயே அதை ரத்து செய்து தமிழக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் அறிக்கை வெளியிட்டார். ரூபி மனோகரனுக்கு ஆதரவாக குமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் அவர் சார்ந்த நாடார் சமூகத்தைச் சேர்ந்த மாவட்ட நிர்வாகிகள் தங்கள் பொறுப்புகளையும் துறந்தனர். தூத்துக்குடி மாவட்ட தலைவர் காமராஜ் உள்ளிட்டோரும் பதவி விலகுவதாக அறிவித்தனர். கார்த்தி சிதம்பரம் உள்ளிட்ட சிலரும் ரூபிக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டனர்.

இதனிடையே குமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களைச் சேர்ந்த காங்கிரஸ் தொண்டர்கள் சத்தியமூர்த்தி பவன் முன்பு நவம்பர் 30-ல் உண்ணாவிரதம் இருக்கப் போவதாகவும் அறிவித்தனர். இதற்காக 500 வாகனங்கள் ரூபி மனோகரன் தரப்பிலிருந்தே புக் செய்யப்பட்டன. இந்த விஷயங்கள் எல்லாம் தினேஷ் குண்டுராவ் காதுக்கு எட்ட, ராகுல் நடைபயணம் போகும் இந்த நேரத்தில் உண்ணாவிரதம் நடந்தால் தேசிய அளவில் பெயரைக் கெடுத்துவிடும் எனச் சொல்லி, ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் சஸ்பெண்ட் உத்தரவுக்கு உடனே தடைபோட்டாராம். கூடவே, ரூபிக்கு ஆதரவாக போராட ஆயத்தமாகி வந்த நிர்வாகிகளையும் தினேஷ் குண்டுராவின் உதவியாளரே போனில் அழைத்து விஷயத்தைச் சொல்லி சமாதானப்படுத்தினாராம். நினைத்ததைச் சாதித்துவிட்டதால் உற்சாகக் கொண்டாட்டத்தில் இருக்கிறது ரூபி தரப்பு.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in