அண்ணன் பிறந்த நாளுக்கு அமவுன்ட் கேட்கும் தம்பிகள்!

திருமாவளவன்
திருமாவளவன்

விசிக தலைவர் தொல்.திருமாவளவன் கடந்த ஆகஸ்ட் 17-ம் தேதி தனது அறுபதாவது பிறந்த நாளை அதிவிமர்சையாகக் கொண்டாடினார். இது அவருக்கு மணி விழா ஆண்டு என்பதால் இந்த ஆண்டு மாவட்ட வாரியாக அவரது பிறந்த நாளை அமர்க்களமாக கொண்டாடி வருகிறார்கள் சிறுத்தைகள். அந்த வகையில் அடுத்த வாரத்தில் அரியலூர் மாவட்ட விசிக சார்பில் திருமா பிறந்த நாள் விழாவைக் கொண்டாட தயாராகி வருகிறார்கள்.

திருமா பிறந்த நாள் விழாவை சாக்காக வைத்துக்கொண்டு அரியலூர் விசிக தம்பிகள் சிலர் வசூல் வேட்டையில் அடவாடி செய்கிறார்களாம். தொழிலதிபர்கள், சிமென்ட் ஆலைகள் மற்றும் வணிக நிறுவனங்களிடம் அதிகாரத்துடன் அமவுன்ட் கேட்கிறார்களாம். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான தொழிலதிபர்கள் சிலர் நேரடியாக திருமாவுக்கே போன்போட்டு புலம்பிவிட்டார்களாம். இதைக் கேட்டு டென்ஷனான திருமா, சம்பந்தப்பட்ட நபர்களை அழைத்து கண்டித்தாராம். இதன் தொடர்ச்சியாக, அரியலூர் மாவட்டத்தின் அதாட்டிய பார்ட்டிகள் சிலர் மீது நடவடிக்கை எடுக்கவும் திருமா தயாராகி வருவதாகச் சொல்கிறார்கள்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in