அமைச்சரை டென்ஷன் ஆக்கிய அந்த வீடியோ!

மனோ தங்கராஜ்
மனோ தங்கராஜ்

சென்னையில் நடந்த திமுக பொதுக்கூட்டத்தில் குஷ்பு தொடங்கி நமீதா வரை பாஜக நடிகைகல் குறித்து சர்ச்சைக்குரிய விதமாகப் பேசினார் திமுக தலைமைக்கழகப் பேச்சாளர் சைதை சாதிக். இதற்காக அவர் மீது 5 செக்‌ஷன்களில் வழக்குப் போட்டிருக்கிறது போலீஸ். சாதிக் மேடையில் அமைச்சர் மனோ தங்கராஜும் இருந்ததால் இப்போது அவரையும் டார்கெட் செய்கிறார்கள் பாஜககாரர்கள்.

குஷ்புவும் தன் பங்கிற்கு, மனோ தங்கராஜ் தன்னிடம் மன்னிப்பு கேட்கவேண்டும் என பேசிவருகிறார். இந்த நிலையில், சைதை சாதிக் மேடையில் பேசும்போது, மனோ தங்கராஜ் சிரித்து ரசிப்பது போல் ஒரு வீடியோ குமரி பாஜக குழுக்களில் இப்போது வலம் வருகிறது. “கனிமொழியே மன்னிப்பு கேட்டபின்பும் பாஜக இதைவைத்து அரசியல் செய்கிறது. அண்ணாமலை அரசியல் கோமாளி” என்றெல்லாம் நேற்று சீறியிருந்தார் மனோ தங்கராஜ்!

அதற்கு பதிலடியாகவே இப்போது இந்த வீடியோவை வைரலாக்கி வருகிறார்கள். இதைப் பார்த்துவிட்டு சூடான அமைச்சர் மனோ தங்கராஜ் தனது ட்விட்டர்பக்கத்தில், ‘வெட்டி ஒட்டி சித்தரித்து பொய்யான வீடியோவை பரப்புகின்றனர் பாஜகவினர். இதில் வியப்பேதும் இல்லை. இந்த விஷயத்தில்கூட வெட்டி ஒட்டி பேசும் பாஜகவினர் உண்மையாகவே புழுகுமூட்டைகள்தான்’ என தனது ஆதங்கத்தை கொட்டியுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in