சைதை சாதிக்கை வைத்து அமைச்சருக்கும் குறி!

மனோ தங்கராஜ்
மனோ தங்கராஜ்

திமுக தலைமைக்கழக பேச்சாளர் சைதை சாதிக், குஷ்பு உள்ளிட்ட பாஜகவில் இருக்கும் தமிழ் நடிகைகள் குறித்து சென்னை பொதுக்கூட்டத்தில் அநாகரிகமாக பேசியதாக சர்ச்சை வெடித்தது. இது தொடர்பாக பாஜக தரப்பில் தரப்பட்ட புகாரின் அடிப்படையில் சாதிக் மீது ஜாமீனில் வரமுடியாத செக்‌ஷன் உள்பட 5 செக்‌ஷன்களில் வழக்கும் பதிவுசெய்யப்பட்டது. ஆனாலும், இதுவரை சாதிக்கை நெருங்கவில்லை போலீஸ். அதிமுக ஆட்சியில் நடிகர் எஸ்.வி.சேகர், பெண் ஊடகவியலாளர் களை தரக்குறைவாக விமர்சனம் செய்த விவகாரத்தில் சென்னை போலீஸ் எத்தகைய மௌனத்தை கடைபிடித்ததோ அதே மௌனத்தை இப்போதும் கடைபிடித்து வருகிறது.

இதனால் தேசிய மகளிர் ஆணையத்தில் இதுகுறித்து புகார் அளித்திருக்கிறார் குஷ்பு. தமிழக போலீஸ் இப்படித்தான் இருக்கும் என்று சொல்லி பாஜக தலைவர் அண்ணாமலைதான் குஷ்புவை தேசிய மகளிர் ஆணையத்தில் புகார் கொடுக்கச் சொன்னாராம். இந்தப் புகாரை வைத்து சைதை சாதிக்கை மட்டுமல்லாது அதே மேடையில் அவரது பேச்சை ரசித்துக் கொண்டிருந்த அமைச்சர் மனோ தங்கராஜையும் விசாரணைக் கூண்டில் நிறுத்த வீடியோ ஆதாரங்களைத் திரட்டிக் கொண்டிருக்கிறாராம் அண்ணாமலை.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in