மிரட்டும் ஆளுநர்... மிரளும் தோழர்கள்!

ஆரிப் முகமது கான்
ஆரிப் முகமது கான்

கேரளத்தில் ஆளுநர் ஆரிப் முகமதுகானுக்கும், முதல்வர் பினராயி விஜயனுக்கும் இடையேயான பனிப்போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. கேரள அமைச்சரவையில் நிறைவேற்றப்பட்ட லோக் ஆயுக்தா, ஆளுநருக்கு பல்கலைக்கழகங்களில் அதிகாரக் குறைப்பு உள்ளிட்ட சட்டதிருத்த மசோதாக்களைக்கூட கிடப்பில் போட்டிருக்கிறார் ஆரிப். இதெல்லாம் போதாது என, ஆளும் இடதுசாரிகளை மிரட்டும் எதிர்கட்சி போல் ஆளுநரே மாறியுள்ளார். இதுதொடர்பாக விமர்சனங்கள் எழுந்துவரும் நிலையில், கேரள ஆளுநர் மாளிகையில் இருந்து ஒரு அவரசர செய்திக்குறிப்பு இன்று வந்துள்ளது.

பினராயி விஜயன்
பினராயி விஜயன்

அந்தக் குறிப்பை ஆளுநரின் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஆளுநர் ஆரிப்பின் செய்தித்தொடர்பாளர், ‘முதல்வருக்கும், அமைச்சர் குழுவுக்கும் ஆளுநருக்கு அறிவுரை சொல்ல சகல உரிமைகளும் உள்ளது. ஆனால், தனிப்பட்ட வகையில் அமைச்சர்கள் ஆளுநர் மாளிகையைக் கொச்சைப்படுத்தும் வகையில் கருத்துச் சொன்னால் பதவி நீக்கம் வரை சந்திக்க நேரிடும்’ என எச்சரித்துள்ளார். இந்தச் செய்தியானது கேரளத்தை ஆளும் இடதுசாரிகளை மிரளவைத்திருக்கிறது. அண்மையில் ராஜ்பவனில் செய்தியாளர்களை சந்தித்த ஆளுநர், கேரள அரசுக்கு எதிராகக் குற்றச்சாட்டுகளை எழுப்பி ஷாக் கொடுத்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in