யாரையும் அனுமதிக்க வேண்டாம் - அமைச்சர் குடும்பம் போட்ட கேட்!

மெய்யநாதன்
மெய்யநாதன்

திடீர் நெஞ்சுவலியால் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொண்ட அமைச்சர் மெய்யநாதன், தற்போது கட்டாய ஓய்வில் இருக்கிறாராம். இன்னும் கொஞ்ச நாட்களுக்கு கட்சியினர் யாரையும் அவரைச் சந்திக்கவிட வேண்டாம், அவர்களுடன் போனிலும் பேச வேண்டாம்” என பிஏ-க்களுக்கு ஸ்டிரிக்டான உத்தரவு போட்டிருக்கிறார்களாம் அமைச்சர் குடும்பத்தினர்.   

எந்தப் பிரச்சினையும் இல்லாதிருந்த மனுஷனுக்கு திடீர் நெஞ்சு வலி வந்ததற்குக் காரணமே கட்சிக்காரர்கள் கொடுத்த குடைச்சல் தான் என பொருமுகிறதாம் குடும்பம். புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில், மணல் கடத்தியதாக லாரி ஒன்று பிடிபட்டது. போலீஸ் விசாரித்தபோது, “அமைச்சர் சொல்லித்தான் செய்கிறோம்” என்று கை காட்டினார்களாம். அன்று தான் பயணத்தின் போது பாதி வழியில் திடீர் நெஞ்சுவலிக்கு ஆளானார் மெய்யநாதன்.  இதேபோல், தனது சாவுக்கு திமுகவினர் தான் காரணம் கடிதம் எழுதி வைத்துவிட்டு ஒரு பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டவர் மெய்யநாதனுக்கு மிகவும் நெருக்கமானவர். அதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்க போலீஸ் தயங்குவதாக புகார் கிளப்பிய எதிர்க்கட்சிகள், குற்றவாளியைக் காப்பாற்ற முயற்சிப்பதாக மெய்யநாதனுக்கு எதிராக குற்றம் சாட்டினார்கள். தன்னைச் சுற்றி பின்னப்படும் இதுபோன்ற சர்ச்சைகளால் தன்னை முதல்வர் குற்றவாளிக் கூண்டில் நிறுத்திவிடுவாரோ என பயந்ததே மெய்யநாதனுக்கு நெஞ்சுவலி வர காரணம் என நம்புகிறார்களாம் அவருக்கு நெருக்கமானவர்கள். அதனாலேயே கட்சியினருக்கும் அவருக்கும் இடையில் கேட் போட்டிருக்கிறார்களாம்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in