என்னாச்சி அண்ணாச்சி... பொன்னார் அண்ணாச்சி!

பொன்.ராதாகிருஷ்ணன்
பொன்.ராதாகிருஷ்ணன்

”குமரி மாவட்டத்தில் (முன்னாள் மத்திய அமைச்சர்) பொன்.ராதாகிருஷ்ணன் திட்டங்கள் என்னும் பெயரில் பல்வேறு குழப்பங்களைச் செய்துள்ளார். இதுகுறித்து பொது விவாதம் செய்யவும் நான் தயார். பொன்.ராதாகிருஷ்ணன் இடத்தையும், நேரத்தையும் தேர்வு செய்யட்டும்” என அமைச்சர் மனோ தங்கராஜ் அண்மையில் சவாலுக்கு அழைத்திருந்தார். “விவாதத்திற்கு தயார்” என பொன்னாரும் பதில் பேட்டி கொடுத்திருந்தார். ஆனால், மனோ தங்கராஜ் கேட்டதுபோல் விவாதம் செய்வதற்கான இடத்தையோ, நேரத்தையோ அவர் சொல்லவில்லை.

அந்த போஸ்ட்டர்...
அந்த போஸ்ட்டர்...

இதையடுத்து, பொன்னாரை மானாங்கண்ணியாய் சீண்டிப் பார்க்க ஆரம்பித்திருக்கிறார்கள் மனோ தங்கராஜ் ஆதரவாளர்கள். இன்று காலை முதல், ‘என்னாச்சி அண்ணாச்சி? பொன்னார் அண்ணாச்சி?’ என்ற தலைப்பில் திமுக ஐடி விங் பொறுப்பாளர்கள் சமூகவலைதளங்களில் ஒரு போஸ்டரை வெளியிட்டு வைரல் ஆக்கிவருகின்றனர். அதில், ‘தேதியும் இடமும் சொல்லுங்கள் என மனோ தங்கராஜ் மூன்றாவது முறை கூறி ஒருவாரம் ஆகிவிட்டது. இடமும், தேதியும் முடிவு செய்யப்பட்டதா பொன்னார் அண்ணாச்சி? இல்லை, வாயால் வடை சுடுவதுதானா இதுவும்? - அமைச்சர் இஸ் வெயிட்டிங்!” என பொன்னாரை சீண்டியுள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in