சுப்புலட்சுமி வருகையை விரும்பவில்லையா அண்ணாமலை?

சுப்புலட்சுமி ஜெகதீசன்
சுப்புலட்சுமி ஜெகதீசன்

திமுக முன்னாள் அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசன் அண்மையில் திமுகவிலிருந்தும் அரசியிலிருந்தும் விலகினார். “இனிமேல் எந்தக் கட்சியிலும் சேரும் எண்ணம் இல்லை” என்று அப்போது அவர் திட்டவட்டமாக தெரிவித்தார். இந்த நிலையில், அவரை பாஜகவுக்கு அழைத்து வருவதாக மாநில தலைவர் அண்ணாமலையிடம் சிலர் பேசினார்களாம். இதுபற்றி ஏற்கெனவே பாஜகவுக்கு வந்த திமுக சீனியரிடம் அண்ணாமலை கருத்துக் கேட்டாராம்.

அண்ணாமலை
அண்ணாமலை

அதற்கு அந்த சீனியர், “சுப்புலட்சுமி தொகுதியில ஏற்கெனவே நம்ம வெயிட்டா தான் இருக்கோம். அதனால தான் அவரை எதிர்த்து நம்ம வேட்பாளர் அங்க ஜெயிச்சுருக்காங்க. அதுவுமில்லாம, என்னை மாதிரி ஆளுங்க அரசியல்ல உங்களுக்கு சீனியர்களா இருந்தாலும் உங்களுடைய தலைவர் பதவிக்கு மரியாதை கொடுத்து, ‘என்ன சார்... வாங்க சார்’ என்று பேசுகிறோம். ஆனா, அந்தம்மா அப்படி இருக்கமாட்டாங்க. ‘என்னப்பா தம்பி அண்ணாமலை...’ன்னு பத்துப் பேருக்கு முன்னால உங்கள கூசாம பேரு சொல்லிக் கூப்பிட்டுட்டாங்கன்னா சங்கடமா போயிரும்” என்று சொன்னாராம்.

இதையடுத்து அந்த டாபிக்கை ஒத்திவைத்துவிட்டாராம் அண்ணாமலை. இருந்தபோதும் பாஜக மகளிரணி நிர்வாகிகளை திமுகவில் சேர்த்த அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பதிலடி கொடுக்கும் விதமாக திமுக தரப்பிலிருந்து பெருந்தலை யாரையாவது பாஜக பக்கம் தள்ளிக்கொண்டு வருவதற்கு ஜரூராக வேலை நடக்கிறதாம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in