அமோகமாய் ‘கவனிக்கும்’ அமைச்சர்களின் வாரிசுகள்!

 மருத்துவர் திலீப்
மருத்துவர் திலீப் ஈரோடு தேர்தல் களத்தில்

ஈரோடு இடைத்தேர்தல் முடிவுகள் தங்களது ஆட்சிக்கான அளவீடாகச் சொல்லப்படும் என்பதால் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனின் வெற்றிக்காக திமுகவினர் கண்துஞ்சாது உழைக்கிறார்கள். அமைச்சர்களும் வரிந்துகட்டி வேலை செய்து கொண்டிருக்கிறார்கள்.

இதில் இன்னொரு சிறப்பு என்னவென்றால் அமைச்சர்களின் வாரிசுகளும் ஆளும்கட்சி தலைமையின் அபிமானத்தைப் பெற தேர்தல் பணிகளில் மெனக்கிடுகிறார்கள். ராஜ கண்ணப்பனின் மகன் மருத்துவர் திலீப், மனோ தங்கராஜின் மகன் ரிமோன் என பலரும் ஆளுக்கொரு ஏரியாவில் ஜாகை போட்டிருக்கிறார்களாம். தந்தையரைவிட இவர்கள் தாராளமாக கரன்சிகளை அள்ளிவிடுவதாகவும் உடன் செல்லும் உடன் பிறப்புகள் அகமகிழ்ந்து சொல்கிறார்கள். ஊரான் வீட்டு நெய்யே... என்பது இதுதான் போலிருக்கிறது!

படம் உதவி : ஜாக்‌ஸன் ஹெர்பி

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in