எச்.ராஜா வேண்டாம்... வேற ஆள் பாருங்க!

அண்ணாமலை, எச்.ராஜா
அண்ணாமலை, எச்.ராஜா

சிவகங்கை மக்களவைத் தொகுதியில் இந்த முறை எப்படியாவது வெற்றிக் கொடியை நாட்டியே தீருவது என தீர்மானம் எடுத்திருக்கிறதாம் பாஜக தலைமை. அதற்காகவே அந்தத் தொகுதிக்கான பொறுப்பாளராக மாநில தலைவர் அண்ணாமலையை நியமித்திருக்கிறது தலைமை. அறிவிக்கப்பட்ட வேகத்தில் தனது வேலையைத் தொடங்கிவிட்டார் அண்ணாமலை. இந்தத் தொகுதியில் தொடர்ச்சியாக பாஜக போட்டியிட்டு வருகிறது. பெரும்பாலான தேர்தல்களில் எச்.ராஜாவே வேட்பாளராக நிறுத்தப் பட்டுள்ளார். ஆனால், ஒருமுறைகூட ராஜாவால் ஜெயிக்கமுடியவில்லை. அதேபோல் இந்தத் தொகுதியில், சாதிய வாக்குவங்கி பெரிதாக இல்லாத ப.சிதம்பரமும் அவரைத் தொடர்ந்து அவரது மகன் கார்த்தி சிதம்பரமும் தொடர்ந்து கூட்டணி பலத்தால் ஜெயித்து வருகிறார்கள். இதற்கான காரண காரியங்களை அக்கு வேர் ஆணி வேராக அலசிக் கொண்டிருக்கிறாராம் அண்ணாமலை.

எச்.ராஜா
எச்.ராஜா

தொகுதி நிலவரம் குறித்து எச்.ராஜா தரப்பினர் ஏதாவது சொன்னாலும். “எனக்குத் தெரியும் ஜி” என்று சொல்லிவிட்டு தனது பாணியைத் தொடருகிறாராம் அண்ணாமலை. அதிமுக கூட்டணி மக்களவைத் தேர்தலுக்கும் நீடிக்கும் என்ற நிலையே இருப்பதால் இம்முறை அதிமுகவின் துணையோடு சிவகங்கையை வென்றுவிட ஸ்கெட்ச் போடும் அண்ணாமலையிடம், “கண்டிப்பாக இந்தத் தொகுதியை காங்கிரசுக்குத்தான் திமுக ஒதுக்கும். கார்த்தி சிதம்பரம் தான் மீண்டும் நிற்பார். அவரை எதிர்த்து எச்.ராஜாவையே மறுபடி நிறுத்தினால் ஜெயிப்பது உறுதியில்லை. அவருக்குப் பதிலாக இம்முறை முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை நாம் நிறுத்தினால் கட்டாயம் ஜெயித்து விடலாம்” என்று கணக்குப் போட்டுக் கொடுத்திருக் கிறார்களாம் சிவகங்கை பாஜககாரர்கள்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in