திமுகவில் சிவபாலன்... திக் திக்கில் குமரி பாஜக!

அண்ணாமலையுடன் சிவபாலன்...
அண்ணாமலையுடன் சிவபாலன்...

பாஜக ஓபிசி அணியின் மாநிலச் செயலாளராக இருந்த சிவபாலன், அண்மையில் திமுகவில் இணைந்தார். பாஜக தலைவர் அண்ணாமலை இதை சாதாரணமாக எடுத்துக் கொண்டாலும் குமரி மாவட்ட பாஜகவினர் என்னவோ ஒருவித பதைபதைப்பில் இருக்கிறார்கள்.

காரணம், மக்களவைத் தேர்தலுக்காக பாஜக கடந்த மூன்று ஆண்டுகளாகவே கன்னியாகுமரி தொகுதியில் களப்பணி செய்து வருகிறது. இது தொடர்பான வேலைத்திட்ட ரகசியங்கள் அனைத்தும் சிவபாலனுக்கு அத்துபடியாம். அதுமட்டுமின்றி, குமரி மாவட்ட பாஜக நிர்வாகிகள் பலரது தனிப்பட்ட வரவு செலவு விவகாரங்களும் சிவபாலனுக்குத் தெரியும் என்கிறார்கள்.

இப்படிப்பட்டவர் திமுக முகாமுக்கு அதுவும் தாங்கள் நேரடி யுத்தம் நடத்தி வரும் அமைச்சர் மனோ தங்கராஜின் விசுவாசியாக மாறி இருப்பது பாஜக முக்கிய நிர்வாகிகளை கலக்கமடையச் செய்திருக்கிறதாம். குமரி பாஜகவுக்கு ஷாக் கொடுக்கும் விதமாக அமைச்சர் மனோ தங்கராஜ் கொடுத்த அசைன்மென்ட் படிதான் சிவபாலனை திமுகவுக்கு நகர்த்தி வந்ததாம் திமுக ஐடி விங்க். கூடிய விரைவில் ஐடி விங்கிலேயே சிவபாலனுக்கு தகுந்த பதவியை அளித்து அவரை வைத்தே குமரி மாவட்டத்தில் இந்துத்துவ வாக்குகளை ஈர்க்கும் உத்தியைக் கையாளப் போகிறாராம் மனோ!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in